குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க மஹிந்த எடுத்த அதிரடி முடிவு!

வழக்கு விசாரணைகளில் குடியுரிமை பறிக்கப்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்கவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்புக்கு இணங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

வழக்குகளுக்கு பயந்து அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியிருந்தார்.

எனினும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நடந்த மிகப் பெரிய ஊழல்,மோசடிகள், அரச வளங்களின் சிறப்புரிமை அதிகாரம், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தியமை சம்பந்தமாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் காரணமாகவே மகிந்த ராஜபக்ச , அரசாங்கத்தை பொறுபேற்றதாக கூறப்படுகிறறது.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்கு கட்டணம் செலுத்தாமை,அந்த நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை சம்பந்தமான (PCI /95/2015) என்ற மனுவுக்கு அமைய நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பான மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவான பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் ஆணைக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.

இந்த மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. ஹேவகே அனுர சிறிவர்தன, 2. விஜேசிங்க பண்டிதகே அருண மூர்த்தி விஜேசிங்க, 3. ஜயசிங்க ஆராச்சிகே உபாலி ரஞ்சித்,4 திலிப் பிரியந்த விக்ரமசிங்க, 5. கெஹெலிய பண்டார திஸாநாயக்க ரம்புக்வெல்ல (கெஹெலி ரம்புக்வெல்ல), 6 பேர்சி மகேந்திர ராஜபக்ச( மகிந்த ராஜபக்சவின் உண்மையான பெயர்) ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

பதவிக்கான வெற்றிடம் ஏற்படாத சந்தர்ப்பத்தில் அனுர சிறிவர்தனவை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியாக முறைகேடாக நியமித்தமை.
மீடியா பெக்டரி நிறுவனம் வெளியிட்ட ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் 10 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 58 ரூபாய் பெறுமதியான விளம்பரத்தை இலவசமாக ஒளிப்பரப்பியதன் மூலம் நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை.
மீடியா சோலுஷன் நிறுவனம் வெளியிட்ட மகிந்த ராஜபக்சவின் 2 கோடியே 4 லட்சத்து 7 ஆயிரத்து 812 ரூபாய் பெறுமதியான தேர்தல் விளம்பரத்தை ஒளிப்பரப்பியதன் மூலம் நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை.
ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கான 8 கோடியே 86 லட்சத்து 3 ஆயிரத்து 768 ரூபாய் பெறுமதியான தேர்தல் விளம்பரங்களை விக்டரி எட்வர்ட்டைசிங் நிறுவனத்திடம் இருந்து பெற்று, அதனை ஒளிப்பரப்பாது திருப்பி கொடுத்து நிறுவனத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமை.
கட்டண அட்டவணையை மாற்றி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வான் ஊடக நேரத்திற்கு இரட்டிப்பாக கட்டணத்தை அறவிட்டு, மிகிந்த ராஜபக்சவுக்கு அதனை விட குறைவான கட்டணத்தை அறவிட்டதன் மூலம் நிறுவனத்திற்கு 11 கோடியே 29 லட்சத்து 4 ஆயிரத்து 638 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை ஆகியனவே இந்த குற்றச்சாட்டுக்களாகும்.
இந்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ தொழில் புரியவோ, பதவிகளை வகிக்கவோ, பொறுப்புகளை வகிக்கவோ தகுதியற்றவர்கள் என்பது ஆணைக்குழுவின் நிலைப்பாடு.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி தீர்ப்பளிக்கப்பட்டால், அந்த நபர்கள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட தகுதியற்றவர்கள் என அரசியலமைப்புச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கவும் தகுதியற்றவர்கள் எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

178Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*