அடுத்த பிரதமர் யார்? ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டம் இதுதான்

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உச்சநீதிமன்றின் தீர்ப்பு இன்று வெளியானதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இதன்படி, அடுத்த பிரதமரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அந்தவகையில் பொருத்தமான நபரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய முன்னணி மேற்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான உச்சநீதிமன்றின் தீர்ப்பு இன்று வெளியானதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாங்கள் முடிவு செய்வோம்.

குறிப்பாக அடுத்த கட்டமாக தேர்தல் இடம்பெறுவதாக இருந்தால் நாங்கள் அது குறித்து விசேடமாக சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

30Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*