ஆட்டத்தைத் தொடங்கியது அமெரிக்கா; மைத்திரிக்கு இறுதி அவகாசம்!

இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக்கத்தை மிக விரைவில் உணரவேண்டியேற்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார்.

Loading...

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்துயுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலைமைகள் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புடன் செயற்படவேண்டும். வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டும். அரசியல் நெருக்கடி என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அதில் நாங்கள் தலையிடவிரும்பவில்லை. ஆனால் இதுவே தொடர்ந்தால் பொருளாதார ரீதியில் பல பாதிப்புக்களை எதிர்கொள்ளவேண்டியேற்படும். அரச நிறுவனங்கள்மீது பாதிப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலையில் எதிர்காலத்தில் இலங்கை தனது நட்பு நாடுகளுடன் எவ்வாறான நம்பிக்கையைப் பேணப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே அரசமைப்பின்படி சட்ட ரீதியான ஒரு அரசு அமைவதற்கு வழசமைக்கவேண்டும் என வலியுறுத்த விரும்புகிறேன்.” என்றார்.

214Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*