ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும்வரை பணிபுறக்கணிப்பு!

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தினை வழங்க வலியுறுத்தி இரண்டாவது நாளாகவும் பணிபுறக்கணிப்பும் டயர்களை எரித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Loading...

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் இடையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பிலான பேச்சுவார்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ள நிலையில் மலையகம் எங்கும் பாரிய ஆர்பாட்டங்கள் இடம் பெற்றநிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்றும் இன்றும் இரண்டாவது நாளாவும் மலையகம் மெங்கும் பணி புறக்கனிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வழங்க வலியுறுத்தி இன்று பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக டயர்களை எரித்தும் சில தொழிலாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதேவேளை மலையகத்தில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பணிபுறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சாரார் கலந்து கொள்ளாது தேயிலை மலைக்கு சென்று தொழில் ஈடுபட்டு வந்தபோதிலும் கூட இன்று முற்பகல் 11மணிக்கு பிறகு தொழிலுக்கு சென்ற ஒரு சாராரும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களால் முன்னெடுக்கபடுகின்ற பணிபுறக்கணிப்பு காரனமாக தேயிலை தொழிற்சாலையின் நடவடிக்கைகள் பாதிக்கபட்டுள்ளதோடு தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள காவலாளிகளையும் தொழிற்சாலைகலை விட்டு வெளியேறுமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரியுள்ளதோடு தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளம் எங்கள் கரம் கிட்டும் வரையில் எங்கள் பணிபுறக்கணிப்பு தொடரும் எனவும் தெரிவித்தனர்.

9Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*