கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தின் பின்னர் பாராளுமன்றம் கூட்டப்படும்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் இன்று (05) காலை 10.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

Loading...

இதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சித் தலைவர்களின் விசேடக் கூட்டம் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடைபெறும்.

இதன்போது பாராளுமன்ற அமர்வின் இன்றைய செயற்பாடுகள் குறித்தும், இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதேவேளை இன்றும் பாராளுமன்ற அமர்வினை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பாராளுமன்ற இன்றைய அமர்வினையும் தாங்கள் புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*