பிரதமரை நியமிப்பதும் நானே! நீக்குவதும் நானே! சபாநாயகரை எச்சரித்துள்ள சிறிலங்கா ஜனாதிபதி

சிறிலங்காவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

நாடாளுமன்றில் இன்றைய தினம் மஹிந்த அரசாங்கம் பெரும்பான்மைபலத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாக கூறி சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தகடிதத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சிறிலங்காஅரச தலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார்.சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவினால்கூடட்ப்பட்டபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராகஜே.வி.பி நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை கொண்டுவந்திருந்தது.

இதற்கு மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திகூச்சல் குழப்பத்திலும் அவையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வாய்மூல வாக்கெடுப்பைநடத்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எடுக்கப்பட்டமுடிவுகளை சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்க கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தநிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி சபாநாயகருக்க பதில் கடிதமொன்றைஅனுப்பிவைத்துள்ளார்.மிகவும் கடும் தொனியிலான வார்த்தைப் பிரயோகங்களைப்பயன்படுத்தி அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த பதில் கடிதத்தில், நாடாளுமன்றம்தொடர்பில் நீதிமன்றல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கை வழக்கு விசாரணையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்என்றும் ஜனாதிபதி குற்றம்சாட்டியிருக்கின்றார்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களுக்கு அமையவே புதியபிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருப்பதாகவும் தெரியப்படுத்தியுள்ள அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன, தான் நியமித்த பிரதமருக்கு பெரும்பான்மை பலம் இருக்கின்றதாஇல்லையா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லைஎன்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 122 பேரினது கையெழுத்துக்களுடன்ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றுசுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி சபாநாயகர் தெரியப்படுத்தப்பட்ட அனைத்துவிடையங்களையும் முழமையாக நிராகரித்துள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு அமைய பிரதமர் ஒருவரை நியமிக்கும் முழுமையானஅதிகாரம் தனக்கே இருப்பதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனசற்றுமுன்னர் விடுத்த கடிதத்தில் ஆணித்தரமாக குறிப்பிட்டிருக்கின்றார்.

134Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*