யாழ்ப்பாணத்தை உலுக்கிய பெரும் சோகம் – உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகின

பலாங்கொடை – பொலிஹூல் ஓயா, பஹன்துடா நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

Loading...

நீர்வீழ்ச்சியில் இன்று பிற்பகல் குளிக்க சென்ற மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

அனர்த்தத்தில் 25 வயதான செல்வரட்ணம் திசான், 23 வயதான சரவணபவன் கோபிசன், 25 வயதான கோபாலகிருஷ்ணன் சாரங்கன் ஆகியோரே உயிரிழந்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த மாணவர்கள் மேலும் சில மாணவர்களுடன் இன்று நீர் வீழ்ச்சியில் குளிக்க சென்றுள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*