மகிழ்ச்சியின் உச்சத்தில் கருணா, வடக்கில் அதிகாரத்தை பிடிக்கிறார் டக்ளஸ்

நல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புதிய அமைச்சரவை திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த பதவியை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வகித்து வந்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டிலுள்ள மக்களுக்க மகிழ்ச்சியான ஒரு விடயம் நடந்தேறியுள்ளது, என்னுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளார், இதனால் நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றதனைத் தொடர்ந்து அது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களை மகிந்தவின் அரசியல் பிரவேசத்தை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அதிகம் வரவேற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

87Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*