முதன் முறையாக தந்தைக்காக பேசிய வைரமுத்து மகன் – என்ன சொன்னார் தெரியுமா?

வைரமுத்து-சின்மயி பாலியல் சர்ச்சை தொடர்பான விவாதத்தில் இதுநாள் வரை மௌனம் காத்துவந்த பாடாலாசிரியர் மதன் கார்க்கி தனது தந்தைக்கு ஆதரவாக தற்போது ஒரு பாடலை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

பரபரப்பாக இந்தியா முழுவதும் வீசிய மி டூ புயலில் சிக்கிய பிரபலங்களில் பாடலாசிரியர் வைரமுத்துவும் ஒருவர். பாடகி சின்மயி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த போது வைரமுத்து தன்னிடம் அத்துமீற முயன்றதாக புகார் கூறினார். இதையடுத்து மேலும் சில பெண்களும் வைரமுத்து மீது புகார் கூறினார். சின்மயி தனது டுவிட்டரில் பல பேர் மீது குற்றம் சுமத்தினாலும் ஊடகங்கள் வைரமுத்து மீதே கவனம் செலுத்தின.

இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு கானொளியில் மறுப்புத் தெரிவித்துவிட்டு வைரமுத்துவும் அமைதியாகி விட்டார். சின்மயி மற்றும் அவரது தாயார் தொலைக்காட்சிகளில் தோன்றி இது சம்பந்தமாக விளக்கமளித்தனர். வைரமுத்து மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பாடகி சின்மயி கூறியிருக்கிறார்.

இந்த சர்ச்சை தொடர்பாக வைரமுத்துவின் குடும்பத்தாரிடம் இதுவரை இருந்து எந்த எதிர்வினையும் வராமல் இருந்தது.

ஆனால் இப்போது தன் தந்தை மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக பாடலாசிரியர் மதன் கார்க்கி லிங்கா படத்தில் ரஜினிக்காக வைரமுத்து எழுதிய உண்மை ஒருநாள் வெல்லும் பாடலைப் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த பாடலில் வரும் வரிகளான “பொய்கள் புயல்போல் வீசும்- ஆனால் உண்மை மெதுவாய் பேசும்” என்று தனது தந்தைக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*