ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்..? கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..?

இமைக்கா நொடிகள்…!

காதல் என்றாலும் அது கண்களில் இருந்தே முதலில் தொடங்க ஆரம்பிக்கும். கண்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். கண்கள் இமைப்பது நின்று விட்டால் அவ்வளவுதான். கண்கள் இல்லாத உடல் இருளான உலகிற்கு சமானதாகும். இத்தகைய சிறப்பு பெற்றது நமது கண்கள்.

கண் துடிப்பா..?

கண்கள் தடுப்பதற்கு ஒரு சில காரணிகள் உள்ளன. இதனை ஆங்கிலத்தில் ம்யோகிமிய(myokymia) என்று அழைப்பார்கள். கண்களில் உள்ள தசைகள் அல்லது நரம்புகள் இழுப்பது போன்ற நிலை ஏற்படுவதே கண் துடிப்பாக கருதுகின்றனர். இவ்வாறு ஏற்படுவது உண்மையில் நல்லதா..? இல்லை ஏதேனும் ஆபத்து உள்ளதா..? என்பதை பின்வரும் பத்தியில் அறிவோம்.

இவ்வளவு அதிர்ஷ்டங்களா..?

கண்கள் துடித்தால் பல வகையான பலன்கள் கிடைப்பதாக நம்ப படுகிறது. குறிப்பாக வலது கண் துடிப்பதால் நினைத்தது அப்படியே நடக்கும் என்றும், வலது புருவம் துடித்தால் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும் என்றும், வலது கண் இமை துடிப்பதால் மகிழ்சியான செய்தி வரும் என்றும் பலரால் நம்ப படுகிறது.

இப்படியுமா இருக்கு…?

அது மட்டுமில்லாமல், கண்ணின் நடுபக்கம் துடித்தால் உங்களின் துணையை பிரிந்து விடுவீர்கள் என்றும், இடது கண் இணை துடிப்பதால் அதிக கஷ்டங்கள் வரும் என்றும், இடது புருவம் துடிப்பதால் குழந்தை பிறப்பு நடக்கும் என்றும், வலது கண் கீழ் பக்கம் துடித்தால் பழிகளுக்கு ஆளாக நேரிடும் எனவும் கூறுகின்றனர்.

வலது கண்ணா..? இடது கண்ணா..?

பலருக்கு வலது கண் துடிக்கும். ஒரு சிலருக்கு இடது கண் துடிக்கும். இப்படி கண்கள் துடிப்பது எந்த விதத்தில் நமக்கு பாதிப்பை தருமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதிலும் ஆண்களுக்கு வலது கண் துடிப்பது நல்லது என்றும், அதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் கேட்டது என்றும் ஒரு பேச்சு வழக்கு இருந்து வருகிறது.

கண்கள் துடிப்பதற்கு காரணங்கள்..?

அதிகமான சோர்வு, மன அழுத்தம், கண்கள் வறட்சி, குடு பழக்கம் போன்ற காரணிகளால் கண்கள் துடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுவே அதிகமாக காபி குடிப்பதாலும் ஏற்படுகிறதாம். சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு காரணங்களாலும் இது ஏற்பட கூடும்.

அடிக்கடி கண் துடிக்கிறதா..?

உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடித்தால் அது அபசகுணமோ, அல்லது அதிக பண வரவோ நடப்பதில்லை. மாறாக இதற்கு காரணமாக இருப்பது நரம்பு சார்ந்த பிரச்சினைகளே. நீண்ட நாட்கள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்று இருந்தால் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உங்களுக்கு இருக்கின்ற என்று அர்த்தம்.

ஆணா..? பெண்ணா..? யாருக்கு நல்லது..?

உண்மையில் ஆண்களுக்கு கண் துடித்தால் அது நல்லது என நம்ப படுகிறது. இது வெறும் மூட நம்பிக்கையாகவே கருதப்படுகிறது. கண்கள் துடிப்பதற்கும் ஆண்களுக்கும் நடக்கும் நல்லதுக்கு எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்றே விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதே தான் பெண்களுக்கும் பொருந்தும்.

எவ்வாறு தடுப்பது..?

கண்கள் துடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால் முதலில் நீங்கள் நன்றாக உறங்க வேண்டும். கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுத்தால் கட்டாயம் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும். உங்களுக்கு அடிக்கடி கண்கள் துடிக்கிறது என்பதை நன்மையாக கருதாதீர்கள். இது மூளை சார்ந்த பிரச்சினையாக கூட இருக்கலாம்.

வீட்டு வைத்தியம்…!

கண்கள் அடிக்கடி துடிப்பதை சாதாரணமாக எடுத்து கொள்ளாமால் மருத்துவரை அணுகுவது மிக நல்லது. மேலும், கண்களுக்கு வெதுவெதுப்பான நீரால் ஒத்தடம் கொடுத்தால் சற்றே இந்த துடிப்பு குறைய தொடங்கும். மேலும், நரம்புகளுக்கு சிறிது ஓய்வும் கிடைக்கும்.

மூட நம்பிக்கைக்கு டாட்..!

நாம் செய்கின்ற எல்லா விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. யாராக இருந்தாலும், இது போன்ற விஷயத்தை அபசகுணமாகவோ, நம்பிக்கையாகவோ எடுத்து கொள்ளாமல் நமது ஆறாவது அறிவை பயன்படுத்தி சற்று சிந்தித்து செயல்பட்டால் ஆபத்துகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

13Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*