மாத்தறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மாத்தறை, ஊறுபொக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

Loading...

இன்று (22) காலை 9.25 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது இனந்தெரியாத நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த சம்பவம் ஹூலங்கந்த, தம்பாஹல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் அகுரெஸ்ஸ வத்த, வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஈ.எஸ். சமிந்த தயாரத்ன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் உயிரிழந்தவர் பஸ்கொட பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*