தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு காசிவிஸ்வநாத நகரை சேர்ந்த சம்பத்குமார், நாகர்கோவிலில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

Loading...

இவருடைய மகன் 20 வயதுடைய விஜயகுமார் இவர் தனியார் பொறியிலாளர் கல்லூரியில் டிப்ளமோ 2 ஆவது ஆண்டு படித்து வந்தார்.

இவர் வீட்டில் சரியாக படிக்காமல் எப்போதும் தொலைபேசியில் பேசியபடி இருந்தார். நேற்றும் அதுபோல விஜயகுமார் செல்போனில் பேசியபடி இருந்தார். இதனை அவரது தாய் அருந்ததி கண்டித்தார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் அங்கு மின்விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த முறைப்பாட்டின் பேரில் வில்லியனூர் பொலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

8Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*