இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இஸ்ரேலில் பணி புரியும் இலங்கையர்களை சந்தித்து அவர்கள் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

Loading...

அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேலுக்கான உத்தியோக பூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தொலைத்தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கு பணியாற்றும் இலங்கையர்களையும் அவர்களுக்கு தொழில் வழங்குவோரையும் இதன் போது சந்தித்தார்.

அவர்கள் முன்வைத்த கோரிக்கை மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுப்பதாக தெரிவித்தார். அங்கு விவசாய துறையில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களை நேரில் சென்று சந்தித்தார். இதன்போது அந்த நிர்வாகத்தினர் இலங்கையினரின் சேவை பணிகளை பாராட்டினார்.

சேவைகளை வழங்கும் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள இலங்கை பணியாளர்களையும் அவர்கள் பணியாற்றும் இடத்தில் அமைச்சர் சந்தித்தார்.

அவர்களது சேமநலன் தொடர்பிலும் பிரதி அமைச்சர் கேட்டறிந்தார். இலங்கை சேவையாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிருவாகத்தின் இலங்கை பணியாளர்களின் ஆற்றல்களை பாராட்டினார். அத்தோடு மேலும் பல இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*