சிறைச்சாலைக்குள் தனது அதிகாரிகளை நிர்வாணப்படுத்தனர்

தான் சிறையிலிருந்த காலத்தில் தன்னுடன் சிறைச்சாலையில் இருந்த ஏனைய இரண்டு அதிகாரிகளையும் சிறைச்சாலையில் உள்ள அனைத்து சிறைக் கைதிகளுக்கு முன்பும் நிர்வாணப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Loading...

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறையிலிருந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும், அது அரசாங்கத்தின் தேவைக்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.

நீதியமைச்சர் தலதா அத்துகோரலவால் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட குழுவொன்றால் இவை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

நிர்வாணப்படுத்திய அதிகாரிகள் 2006ம் ஆண்டு முதல் சதொச நிறுவனத்தில் ​சேவையாற்றிய முன்னாள் தலைவர் மற்றும் தனது செயலாளர் ஆகிய இருவர் என்று அவர் கூறியுள்ளார்.

அவர்களுடைய மனித உரிமை மீறப்பட்டு ஏனைய சிறைக் கைதிகளுக்கு முன்னால் அவர்கள் இருவரையும் நிர்வாணப்படுத்தியதாக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

9Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*