மாத்­தை­யா – கரு­ணா­வுக்கு நடந்­தது விக்­னேஸ்­வ­ரனிற்குமாம்?

வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரைப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வது குறித்த சர்ச்­சை­யால் நேற்­றைய சபை நட­வ­டிக்­கை­கள் சிறிது பர­ப­ரப்­ப­டைந்­தன.

வடக்கு அமைச்­ச­ரவை இயங்க முடி­யா­மல் முடங்­கிக் கிடக்­கும் நிலை­யில் அந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இழுத்­த­டிக்­கும் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அந்­தப் பத­வி­யில் இருந்து நீக்­கு­வ­து­தான் அதற்கு மாற்­று­வழி என்று தெரி­வித்­த­தன் மூலம் முத­ல­மைச் சரைப் பதவி நீக்­கு­வது குறித்த சர்ச்­சைக்கு தொடக்­க­மிட்­டார்.

இது போன்ற சம­யங்­க­ளின் மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­துக்கு மாறாக இருந்­தா­லும் விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் போன்று செயற்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

‘‘மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யாக விசு­வா­ச­மாக நடக்­காத சந்­தர்ப்­பங்­க­ளில் முக்­கிய முடி­வு­களை நாங்­கள் எடுக்­க­வேண்­டும்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் சில தீர்­மா­னங்­களை இப்­ப­டி­யான சந்­தர்ப்­பங்­க­ளில் எடுத்­தி­ருக்­கின்­றார்­கள்.

மாத்­தை­யா­வுக்கு என்ன நடந்­தது? கரு­ணா­வுக்கு என்ன நடந்­தது? அந்­தத் தீர்­மா­னங்­கள் மக்­க­ளாட்­சிக்­குப் புறம்­பா­ன­வை­யாக இருக்­க­லாம்.

ஆனால் அப்­ப­டி­யான தீர்­மா­னங்­கள் சில இடங்­க­ளில் தேவைப்­ப­டு­கின்­றன’’ என்­றார் ஐ.அஸ்­மின்.

வடக்கு மாகாண சபை­யில் அமைச்­ச­ரவை தொடர்­பான சர்ச்சை எழுந்த போது விவா­தத்­தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எல்லா நேரத்­தி­லும் சுறு­சு­றுப்­பான – புத்­தி­சா­லித்­த­ன­மாக (ஸ்மாட்­டாக) இல்­லா­வி­டி­னும் சிக்­கல் நிறைந்த நேரங்­க­ளில் புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வம் தேவைப்­ப­டும்.

அமைச்­ச­ரவை இல்லை. அமைச்­ச­ர­வை­யின் தலை­வ­ரும் முத­ல­மைச்­ச­ரு­மா­ன­வர் பொறுப்­புச் சொல்ல வேண்­டிய சபைக்­குக் கட்­டு­ப­டு­கின்ற நிலை­யில் இல்லை. எனவே இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வம் தேவைப்­ப­டு­கின்­றது.

சபைக்­குக் கட்­டுப்­ப­டாத, சபைக்­குப் பொறுப்­புச் சொல்­லாத ஒரு முத­ல­மைச்­சர் எங்­க­ளுக்­குத் தேவையா என்­பது கேள்வி.

அத­னைச் சபை தீர்­மா­னிக்­க­வேண்­டும். அந்­தத் தீர்­மா­னத்தை நீங்­கள் (அவைத் தலை­வர்) முன்­வைக்­க­லாம். இந்த விட­யத்­துக்கு என்ன முடி­வெ­டுக்­கப் போகின்­றோம்?

இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளில் சபை ஏக­ம­ன­தா­கத் தீர்­மா­னம் எடுத்து முத­ல­மைச்­ச­ருக்கு அறி­வித்­துள்­ளது. தேநீர் கடை­யில் பேசு­ப­வர்­கள்­கூட அமைச்­ச­ரவை நிய­மிக்­கின்ற அதி­கா­ரம் யாருக்கு இருக்கு என்று தெளி­வா­கச் சொல்­கின்­றார்­கள்.

முத­ல­மைச்­சர்­தான் அமைச்­சர்­கள் யார் என்­பதை ஆளு­ந­ருக்கு அறி­விக்­க­வேண்­டும். இது எல்­லோ­ருக்­கும் தெரி­யும். காலம் கடத்தி ஒன்­றும் நடக்­க­வில்லை என்று விடக் கூடிய பிழை­யான முன்­னு­தா­ர­ணத்தை நோக்­கித்­தான் முத­ல­மைச்­சர் சென்று கொண்­டி­ருக்­கின்­றார். அப்­ப­டி­யாக இருந்­தால் இந்­தச் சபை­யின் விவா­தத்தை இன்­னொரு நிலைக்கு மாற்­றுங்­கள்.

மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யாக – விசு­வா­ச­மாக நடக்­காத சந்­தர்ப்­பங்­க­ளில் முக்­கிய முடி­வு­களை நாங்­கள் எடுக்­க­வேண்­டும். அப்­ப­டி­யான நில­மை­யில் நீங்­கள் (அவைத் தலை­வர்) புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வத்தை எடுங்­கள் – என்­றார்.

அவைத் தலை­வரோ, புத்­தி­சா­லித்­த­ன­மான தலை­மைத்­து­வத்தை எடுத்­துத்­தான் இந்த விட­யத்­தில் சம­ர­ச­மான போக்­கில் சென்று கொண்­டி­ருக்­கின்­றேன் – என்­றார். எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா, சம­ர­ச­மான போக்கு அல்ல சர­ணா­கதி என்று குறிப்­பிட்­டார். அவைத் தலை­வர் அதனை மறு­த­லித்­தார்.

அமைச்­சர் ஒரு­வரை நிய­மிக்­கும் ஆலோ­ச­னையை நீங்­கள் வழங்­க­லாமா? என்று அவைத் தலை­வ­ரி­டம் அஸ்­மின் கேள்வி எழுப்­பி­னார். இல்லை என்று அவைத் தலை­வர் பதி­ல­ளித்­தார்.

இந்­தச் சபை­யின் பெரும்­பான்மை நம்­பிக்­கை­யைப் பெற்ற முத­ல­மைச்­ச­ருக்­குத்­தான் அந்த அதி­கா­ரம் இருக்­கின்­றது. அவர் அத­னைச் செய்­ய­வில்லை என்­றால் அடுத்­தது என்ன? அந்­தப் பரிந்­து­ரையை மேற்­கொள்­ளக் கூடி­ய­வரை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­து­தான் – என்­றார்.

7Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*