முன்னாள் கடற்படை தளபதியை கைதுசெய்யுமாறு உத்தரவு

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் கடற்படை தளபதியுமான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்து, தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கடற்படையின் முன்னாள் லெப்டினட் கமாண்டார் நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவர் நாட்டில் இருந்து தப்பிச் செல்லவும் தலைமறைவாக இருப்பதற்கும் உதவியமை தொடர்பில் சாட்சியங்கள் இருக்குமாயின் கைதுசெய்யுமாரே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பான வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரான நேவி சம்பத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேவி சம்பத், மலேசியாவுக்கு தப்பிச் செல்ல ரவிந்திர விஜேகுணரத்ன உதவியுள்ளதாகவும் 5 லட்சம் ரூபாய் பணத்தையும் வழங்கியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

43Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*