முள்ளியவளை பெருந்தெரு மறுசீரமைப்புப் பணிகள் மரபுவழியில் தொடக்கி வைப்பு.

வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன் அவர்கள் கலந்து

கொண்டு இவ் வீதியின் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

மேலும் நீண்டகாலமாக இவ் வீதி சீரற்றுக் காணப்பட்டதால் இப்பகுதி மக்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது இரண்டுகட்டங்களில் இவ்வீதியின் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள பெருந்தெரு வீதியின் மறுசீரமைப்புப் பணிக்கான தொடக்கநாள் நிகழ்வுகள் 2018.08.27(திங்கள்)

இன்றைய நாள் காலை 09:00மணியளவில் நடைபெற்றன.

இவ்வீதியின் மறுசீரமைப்புப் பணிகளை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

அவர்கள் மரபுவழியில் தொடக்கிவைத்தார்.

குறித்த பெருந் தெரு வீதியானது முன்பு முள்ளியவளையின் முதன்மை வீதியாக

திகழ்ந்ததுடன், இன்றளவும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தீர்த்தக்

குடம் கொண்டு செல்லப்படுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த வீதியாகவும்

காணப்படுகின்றது. இவ்வீதி சீரின்மையால் சுகாதார பாதிப்புக்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வீதியின் பாவனையில் பல குடும்பங்களும் உள்ளன.

மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இவ்வீதியானது கடந்த 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இவ்வீதி தொடர்ந்து சேதங்களுக்கு உள்ளான நிலையிலேயே காணப்பட்டு வந்துள்ளது.

எனவே இவ்வீதியால் போக்குவரத்துச் செய்கின்ற மக்கள் பலத்த இன்னல்களை எதிர்கொண்டுவந்துள்ளனர்.

இந் நிலையில் இப்பகுதி மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் மாகாணத்தில்

துறைசார்ந்தவர்களுக்கு தொடர்ச்சியாக இவ்வீதி மறு சீரமைப்பு தொடர்பாக

வலியுறுதத்திவந்த நிலையிலேயே தற்போது இவ்வீதி மறுசீரமைக்கப்படவுள்ளது.

மேலும் இவ்வீதியின் மறுசீரமைப்பிற்கு 35மில்லியன் உரூபாய் நிதி ஒதுக்கீடு

செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 15மில்லியன் உரூபாயில் ஒரு பகுதி வீதி முதற்கட்டமாக மறுசீரமைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மரபுவழியில் வீதியின் மறுசீரமைப்புப் பணிகளைத்

தொடக்கிவைத்து பின் கருத்துத் தெரிவித்த ரவிகரன் அவர்கள்.

மிக நீண்ட காலமாக பலத்த சேதங்களுக்கு உள்ளாகி காணப்பட்ட இவ்வீதியை

பயன்படுத்துவதில் இப்பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்கி வந்துள்ளனர்.

ஒரு மக்கள் சார்பாளன் என்ற வகையில் அவர்களுடைய இடர்பாடுகளை என்னிடம்

கோரிக்கையாக முன்வைத்தனர். இந் நிலையில் தொடர்ச்சியாக நான் பல

இடங்களிலும் இவ்வீதியின் மறுசீரமைப்புத் தொடர்பாக உரியவர்களிடம் வலியுறுத்திவந்தேன்.

அதன் பயனாக இன்று இந்த வீதியை மறு சீரமைப்பு செய்கின்ற தொடக்க நாளில்நாம் அனைவரும் கூடியுள்ளோம்.

இதற்காக எனது கோரிக்கையை ஏற்று மக்கள் நலன் சார்ந்த இவ்விடயத்தில்

உதவியவர்களைப் பாராட்டுகின்றேன்.

அந்த வகையில் இவ்வீதியால் போக்குவரத்துச் செய்வதில் மக்கள்

எதிர்நோக்கிவந்த இடர்பாடுகள் களையப்படப்போவதை எண்ணி மனம்

மகிழ்கின்றேன். மறு சீரமைப்புப் பணிகளை வரைவுபடுத்தி இவ்வீதியை மக்களின் பாவனைக்காக ஒப்படைக்குமாறு உரியவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

மேலும் திரு.கையிலைநாதன் – சுதர்சன் (வைத்தியர்) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா –ரவிகரன் அவர்கள், திரு.தம்பு – சிவராசலிங்கம் (வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர்,

வடமாகாணம்), கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மதிப்புறு சி.தியாகராசா மற்றும் மதிப்புறு சி.லோகேசுவரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் மதிப்புறு இ.சந்திரரூபன், வி.முரளிதரன் (பிரதான பொறியியலாளர், கிளிநொச்சி), திரு.கு.சிவானந்தன் (பொறியியலாளர்), ஆகியோர் கலந்துகொண்டதுடன், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

5Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*