முல்லைத்தீவு வவுனியா போன்ற எல்லையோரங்களில் நடக்கும் பாரிய மோசடி

வடக்கில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என்று எல்லையோரக் கிராஙம்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. அதன் இன்னொரு கட்டமே வெடுக்குநாறி மாலை சிவன் கோயில் மீதான அணுகுமுறைகள். மகாவலி திட்டம் தமிழர்களின் நிலங்களை சூறையாடும் பின்நோக்கம் கொண்டது என்றே தமிழர்கள் கருதுகிறன்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்,இப்பதிவில் முல்லைத்தீவில் இன்று மகாவலி ஆக்கிரமிப்புத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெறுவதை முன்னிட்டு இங்கே பிரசுரம் ஆகின்றது.

இலங்கையை அந்நியர்கள் கைப்பற்றியபோது கரையோரங்களைத்தான் முதலில் கைப்பற்றினர். அதன் ஊடாக அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொண்டு மையத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களைப் கைப்பற்றினார்கள். அத்துடன் எல்லை ஓரங்களிலேயே தமது அடையாளங்களையும் நிலை நிறுத்தினர்.

இவ்வாறான நிலை ஒன்றையே இன்று ஈழமும் எதிர்கொள்கிறது. தமிழர் தாயகத்தின் எல்லை ஓரங்களை கைப்பற்றும் முயற்சியில் பெரும்பான்மையினர் ஈடுபடுகின்றனர். அத்துடன் அங்கு தமது அடையாளங்களை நிலைநிறுத்தும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர கிராமமான கொக்கிளாயில் 1984இல் தமிழ் மக்கள் இன அழிப்பு கலவரம் ஊடாக துரத்தப்பட்ட நிகழ்வும் இவ்வாறானதொரு நடவடிக்கையே. இதன் காரணமாக தமிழர்களுக்குச் சொந்தமான இரண்டாயிரத்து 149 ஏக்கர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொக்கிளாயில் மிகப் பெறுமதி மிக்க விவசாய நிலம், மீன்பிடி முகத்துவாரம் என்பவற்றை தமிழ் மக்கள் இழந்துள்ளனர். குறித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தை மையப்படுத்தியே சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அங்கு சிங்கள பௌத்த அடையாளங்களை நிறுவி அந்த மண்ணின் வரலாற்றையே மாற்றி எழுதும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.

இப்போது நிலத்தை இழந்த கொக்கிளாய் மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். தொடர்ந்து நில அபகரிப்பு இடம்பெறும் நிலையில் இது தொடர்ந்தும் நிலத்தை அபகரிக்கும் ஒரு ஊக்குவிப்பதாக அமையப் போகின்றது. இதனால் நிலத்தை அடிப்படையாக கொண்ட வாழ்வு பாதிக்கப்படும்.

காலம் காலமாக வாழ்ந்த நிலத்தின் வரலாறு, பூர்வீகம், வாழ்வியல் பண்பாடு என்பன கேள்விக்கு உள்ளாகும். நிலத்தை இழந்த மக்களுக்கு மீண்டும் நிலத்தை வழங்குவதே உரிய நடவடிக்கையாகும். அத்துடன் குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்கலாம். இதேபோல தென்னைமரவாடி மக்களின் வயல் நிலங்களை சுறண்டும் நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அந்த மக்களின் வயல் நிலங்களுக்கு சிங்களவர்கள் சேதங்களை விளைவிக்கின்றனர்.

4Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*