காவி உடை களைத்து சிறைச்சாலை ஆடையில் ஞானசார தேரர்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 6 வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைச்சாலை ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர் தற்போது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் ஐந்தாம் இலக்க வோட்டில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை ஆயுதம் தாங்கிய இரண்டு சிறைக்காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வைத்தியசாலைகளில் சிறைக் கைதிகள் பயன்படுத்தும் வகையில் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளை சேர்ட், வெள்ளை சாரம், மிருதுவான ஜம்பர் என்று கூறப்படும் காற்சட்டை போன்றவையே அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலையில் இருக்கும்போது ஞானசார தேரர் ஜம்பர் அணிய வேண்டியது அவசியமாகும் என்று சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஞானசாரருக்கு 6 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டாலும் அது சிறைச்சாலையில் இருக்கும்போது நான்கு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று சிறைச்சாலை தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளது.

56Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*