விடுதலைப் புலிகளுடன் யுத்தம்! இராணுவ அதிகாரிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென ஆர்வம்காட்டி வரும் ஜனாதிபதி, இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த ஆறாம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த யுத்தம் தொடர்பில், இலங்கையில் பல புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன.

எனினும், அந்த புத்தகங்களில் முறையாக யுத்தம் தொடர்பில் ஆவணப்படுத்தப்படவில்லை என்பதால், அதனை அரசாங்கம் முறையாக ஆவணப்படுத்தும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளது.

முறையான வரலாறுகளை உள்ளடக்கிய யுத்த ஆவணமொன்று வெளிவரும் வரையில், இறுதி யுத்தத்தை ஆவணப்படுத்தும் திட்டம் தொடர்பில், இரகசியம் பேணப்பட வேண்டுமென, ஓய்வு பெற்ற படைதளபதிகளிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளதாகவும்” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும், அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில், உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில் லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

74Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*