முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க மகிந்த தலைமையில் கூடும் கூட்டு எதிர்க்கட்சி

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் தம்மை சுயாதீன உறுப்பினர்கள் என அறிவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அடுத்த செவ்வாய்கிழமை நடைபெறும் முக்கியமான பேச்சுவார்த்தையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், கூட்டு எதிர்க்கட்சிக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட உள்ளது எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக மாற தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் எதிரணியாக செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*