இலங்கையின் கடற்கரைப் பகுதியொன்றில் கரையொதுங்கும் ஆயிரக்கணக்கான பொருட்கள்

இலங்கையின் புத்தளம் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மருத்துவ கழிவுப் பொருட்கள் கரையொதுங்குவதாக இந்திய ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக காலாவதியான மருந்துகள், மருந்து போத்தல்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஊசிகள் போன்ற கழிவுப் பொருட்கள் பெருமளவில் கரையொதுங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பொருட்கள் அனைத்தும் காலாவதியானவை எனவும், அவை இந்திய உற்பத்தி பொருட்கள் எனவும் தெரியவருகிறது.

மேலும், இவை காலவதியாகியதால் கடலில் கொட்டப்பட்டிருக்கலாம் என புத்தளம் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த மருத்துவ கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்பட்டமை அபாயகரமானதாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

18Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*