பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலையேற்றம் !

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

நிதியமைச்சினால் நேற்று (10) அறிவிக்கப்பட்ட விலைசூத்திரத்திற்கு அமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதனை கருத்திற் கொண்டு இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய இன்று (11) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 95 இன் விலையை ரூபா 2 இனாலும் சுப்பர் டீசலின் விலையை ரூபா 1 இனாலும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய

IOC – இந்தியன் ஒயில் நிறுவனம்

பெற்றோல் Octane 95 – ரூபா 158 இலிருந்து ரூபா 160 ஆக ரூபா 2 இனாலும்

சுப்பர் டீசல் – ரூபா 129 இலிருந்து ரூபா 130 ஆக ரூபா 1 இனாலும் அதிகரித்துள்ளது.

பெற்றோல் Octane 92 (ரூபா 146), டீசல் (ரூபா 118) ஆக தொடரந்து பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் 95, சுப்பர் டீசல் விலையேற்றம் 3.54pm (Aug 10, 2018)

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பெற்றோல் ஒக்டேன் 95 இனது விலை ரூபா 2 இனாலும், சுப்பர் டீசலின் விலை ரூபா 1 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (11) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலையேற்றம் அமுலில் இருக்கும் என, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆவது நாளில் திருத்தம் செய்யப்படுவதற்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதற்கமைய

CPC – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

பெற்றோல் Octane 95: ரூபா 155 இலிருந்து ரூபா 157 ஆக ரூபா 2 இனாலும்

சுப்பர் டீசல்: ரூபா 129 இலிருந்து ரூபா 130 ஆக ரூபா 1 இனாலும் விலை அதிகரித்துள்ளது.

பெற்றோல் Octane 92 (ரூபா 145), டீசல் (ரூபா 118) இனது விலைகள் அதே நிலையில் தொடர்ந்தும் பேணப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஆலோசனைக்கு அமைய, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு, விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது தொடர்பிலான அனுமதியை, எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

புகையிரத பணி புறக்கணிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அசெளகரியங்களுக்குள்ளான புகையிரத பயணிகளுக்கு நிவாரணளிக்கும் வகையில் வழங்குவதற்கு விசேட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதற்கமைய, புகையிரத பருவச்சீட்டு, பயணச்சீட்டை கொண்டுள்ள பயணிகளின் போக்குவரத்தின் பொருட்டு, விருப்பமுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர், இவ்வாறு புகையிரத பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை வழங்கும் தனியார் பஸ்களுக்கு, நிதியமைச்சின் மூலம் அதற்கான பணம் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

22Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*