இரவில் மட்டகளப்பு பேருந்தில் பயணிப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை! நம்பி பயணம் செய்பவர்களுக்கு எலி கொத்து!இப்படி பண்ணலமா?

இரவு கொழும்பு, யாழ்ப்பாணம்,திருகோணமலை போன்ற தூர பிரயாண பேருந்துகளில் மட்டக்களப்பு அம்பாரை பகுதியிலிருந்து புறப்பட்டவங்களின் உணவு தேவைக்காக ஓட்டமாவடி அருகிலுள்ள மாவடிச்சேனை முஸ்லிம் கிராமத்தில் கொழும்பு பிரதான வீதியில் உள்ள முஸ்லிம் உணவகத்தில் இறைச்சி கொத்து கேட்டவர்களுக்கு எலி கொத்துரொட்டி விநியோகம் செய்துள்ளார்கள்.

தூர பிரயாண சேவைகளில் ஈடுபடும் பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களே உங்களுக்கு கிடைக்கும் ஓசி சாப்பாடுகளுக்காக இப்படியான தரம், சுத்தம் குறைந்த மோசடியான உணவுகளை வழங்கும் ஹோட்டல்களில் நிறுத்தி பிரயாணிகளின் உயிருக்கு ஆபத்தை உருவாகிறீர்கள்.

இந்தளவு கேவலமான ஹோட்டலில் நிறுத்துவதை விட உங்கட கையாலே நஞ்சக்கொடுத்து பேருந்தை நம்பி வரும் அப்பாவி மக்களே சாகடிக்கலாம்.

மேலும் மட்டக்களப்பில் இருந்து வெளிவரும் அனைத்து இரவு பேருந்துகளிலும் இந்த அவலநிலையே தொடர்கிறது.

167Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*