தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் மாற்றம்

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு அமைவாக அதன் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செப்டெம்பர் முதலாம் திகதி (09.01) முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உள்ளநாட்டு அலுவல்கள் அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைய, இது தொடர்பாக நேற்றைய (09) திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, செப்டெம்பர் 01 முதல், தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கட்டணங்கள் வருமாறு:

• முதற் தடவை விண்ணப்பிக்க – ரூபா 100

• இணை பிரதியை பெறல் – ரூபா 500

• திருத்தம் மேற்கொள்ளல் – ரூபா 250

• (காலவதியான) புதுப்பித்தல் – ரூபா 100

28Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*