அடுத்துவரும் ஐனாதிபதி தேர்தலில்யார் போட்டியிட்டால் எவ்வளவு வாக்குகளை பெறக்கூடும்? மக்களின் மனநிலை என்ன?

மகிந்தவுக்கான வாக்கு வங்கி- 52லட்சம்

Loading...

ரணிலுக்கான வாக்கு வங்கி-42லட்சம்

மகிந்தவுக்கு பதில் பசில் போட்டியிட்டால் வாக்கு வங்கி 37லட்சம்.

மகிந்தவுக்கு பதில் கோத்தபாய போட்டியிட்டால 27-32 லட்சம்

மகிந்தவுக்கு பதில் சாமல் போட்டியிட்டால் 36-39 லட்சம்

மகிந்தவுக்கு பதில் நாமல் போட்டியிட்டால் 32-42 லட்சம்.

மகிந்தவுக்கு பதில் சிராந்தி போட்டியிட்டால் 47-52 லட்சம்.

மைத்ரி -15-18லட்சம்.

மகிந்த Vs ரணில் வெற்றி வாய்ப்புகள்:

1. 52லட்சம் : 47 லட்சம்

2. 62லட்சம் : 42 லட்சம்.

அதாவது மகிந்தவின் வாக்கு வங்கி 52 லட்சம். ரணிலின் வாக்கு வங்கி 42 லட்சம். ஏனையவை புதிய வாக்குகள் + சிறுபான்மையினரின் வாக்குகள். இந்த முறை சிங்கள புதிய வாக்குகள் முழுமையாகவும் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் வாக்குகள் ஒரு பகுதியும் மகிந்தவை சென்றடையும். மிகுதி சிறுபான்மை புதிய வாக்குகள் ரணிலுக்கு சென்றடையும். சிறுபான்மை நிரந்தர வாக்கு வங்கி ஆச்சரியப்படும் வகையில கணிசமான அளவை மகிந்த பெறக்கூடும். எனினும் அதிகப்படியான சிறுபான்மை தமிழ் வாக்குகளை ரணிலே பெறக்கூடும்.ஹக்கீமும் ரிஷாத்தும் யாருடன் இருக்கின்றார்கள் என்பதை பொறுத்து முஸ்லிம் வாக்குகளை ரணிலோ அல்லது மகிந்தவோ பெறக்கூடும்.

அதாவது மகிந்த: ரணில் வெற்றி வாக்குகள்

மகிந்த- புதியவாக்குகள்+சிறுபான்ம வாக்குகள்= 54-57லட்சம்.

ரணில்+புதியவாக்குகள்+சிறுபான்மை வாக்குகள்+முஸ்லிம் கட்சிகள்= 46-49லட்சம் வாக்குகள். கிட்டதட்ட 10-12லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்தவே வெற்றி பெறுவார். ஆனால் மைத்ரி ரணிலுக்கு ஆதரவாக இருந்தால் ரணில் மகிந்த கடும் போட்டிக்கு நடுவே ரணில் குறைந்தது ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஆதாவது

ரணில்+மைத்ரி+தமிழ் முஸ்லிம் கட்சிகள்+புதியவாக்காளர்கள் -62-64லட்சம் வாக்குகள் பெறக்கூடும் மகிந்த 54-59லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடையலாம்.

ஆனால மகிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்ற நிலையில் இந்த அரசியல் கணக்கு அவசியமில்லாமல் போகின்றது.

மகிந்தவுக்கு பதில் வேறு யார் களத்தில் நின்றாலும் ரணிலே வெற்றி வேட்பாளராக இருப்பார். அரசின் அதிர்ப்தி வாக்குகளை அவர்கால் பெற முடியாது.

பசில்+சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் இணைந்தால் போட்டி கடுமையானதாக மாறும். பசிலுடன் மைத்ரி இணைந்தால் பசில் வெற்றிபெறுவார். இவ்வாரே சிராந்தி ராஜபகச+சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் இணைந்தால் வெற்றி பெற முடியும்.

கோத்தாபாய ராஜபக்சவுக்கு மகிந்தவின் வாக்குகளில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்க கூடும்.. மாறாக சிங்கள மென்போக்கு வாக்குகள்+சிறுபான்மை வாக்குகள் முழுமையாக ரணிலை சென்றடையும்

அதாலது

கோத்தா Vs ரணில் என்ற நிலை ஏற்பட்டால்

ரணில் + மகிந்த தரப்பு சிங்கள மென்போக்கு வாக்குகள்+தமிழ் முஸ்லிம் வாக்குகள்+புதிய வாக்குகள்- 57-67 லட்சம்

மகிந்த தரப்பு சிங்கள கடும்போக்கு வாக்குகள் ( கோததா) – 27-32 லட்சம்

மகிந்த தரப்பு சிக்கள கடும்போக்கு வாக்குகள் ( கோத்தா) ÷ மைத்ரி – 42-47 லட்சம். மறுமுனையில் ரணில் கிட்டதட்ட 22-25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

ஆக மகிந்த தரப்பில் அரசுக்கு எதிரான அதிர்ப்த்தி வாக்குகள்+ சிங்கள மென்போக்கு வாக்குகள் + புதியவாக்குகள் + சிறுபான்மை வாக்குகளை கவரக்கூடியவர்கள்.

1. மகிந்த

2. சிராந்தி

3. பசில்

4. நாமல் ( ஓரளவுக்கு) மட்டுமே. கோத்தா போட்டியிட்டால் மகிந்த தரப்பு இந்த வாக்குகளை முமுமையாக இழப்பதுடன் இந்த வாக்குகள் எதிர்தரப்பில் ரணில் போட்டியிடும் நிலையில் அவரை சென்றடையும்.

யாருக்கு தெரியும்? அரசியலில் எதிர்பாராத எதுவும் நடக்கலாம். என்னதான் கூட்டல் கழித்தல் போட்டாலும் இறுதி முடிவு என்னவோ இந்திய-அமெரிக்க கைகளிலேயே உள்ளது.

34Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*