கல்முனை தமிழ் இளைஞர்களின் பலரும் வியக்கும் மனிதாபிமான நடவடிக்கை

Loading...

கல்முனையில் தமிழ் இளைஞர்கள் ஒற்றுமையாக கல்முனை சேனா எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல சமூகசார் வழிநடத்தல்களை அணைத்து கிழக்கு மாகாண தமிழருக்கு ஒற்றுமையை வழிகாட்டினார்கள் பிரதேச சபை தேர்தலில் தமிழரை ஒற்றுமையாக வாக்களிக்க வைத்து கல்முனை நகர வட்டாரத்திலும் முஸ்லிம்களை மண் கவ்வ வைத்தார்கள்.

அத்தோடு மாநகரில் முதல் முறையாக தமிழரின் இருப்பிடம் என்பதை பறை சாற்ற தமிழ் கலாச்சார விழாக்களான தைப்பொங்கல், அத்தோடு ஜல்லிக்கட்டு காளை, தரவைச்சித்தி பிள்ளையார் ஊர்வலம் என்பவற்றை விழாவை நகரம் பூராக விழாக்கோலம் பேணும் முகமாக பிரமாண்டமாக செய்தார்கள்.

சிங்கள முஸ்லிம் கண்டி பிரச்சினை கல்முனையில் முஸ்லிம்கள் கர்தால் போட்டு தமிழர் பகுதியில் கலவரம் செய்ய எத்தனித்த போது நகரிற்கு வந்த வேறு மாவட்ட தமிழரை பாதித்தது தமது பிரயாணம் தடைப்பட்ட போது அவர்களை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி அவர் அவர் ஊருக்கு அனுப்பி தமிழ் மக்களை ஆபத்துகளிடமிருந்து காத்தார்கள்.

கிழக்கில் #கல்முனை நகரத்தில் தமிழரின் இருப்பை காப்பாற்ற எப்படி ஒற்றுமையாக செயற்பட்டார்களோ அதே போல் மனிதாபிமான நடவடிக்கைகளிலும் கொஞ்சமும் சளைக்காதவர்கள் என்பதை அம்பாரை மாவட்டத்தில் பிறிதொரு தமிழ் கிராமமான மல்வத்தையில் சேர்ந்த வயோதிப தாயை அவரது பிள்ளைகள் கைவிட்டு அநாதையாக வீதியில் இருந்த அம்மாவை யாரோ தெரியாதவங்கதானே நோய் வந்து செத்து போனால் எமக்கு என்ன என ஒதுங்கிச்செல்லாமல் எமது சமூகத்து சார்ந்த வயோதிப தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து அவரது பாதுகாப்பை பூரணப்படுத்தும் முகமாக நீதிமன்றில் சட்டத்தரணி சகிதம் ஆஜர்படுத்தி அடுத்த நீதிமன்றம் கூடும் நேரம் பிள்ளைகளை நீதிமன்றில் ஆஜராகி அவர்களை பாதுகாவலராக வெளிப்படுத்தி முதியோர் இல்லத்தில் சேர்க்கும் முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதுவரை அவ் அம்மா நீதிமன்ற ஒப்புதலுடன் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெறுக்கூடியவாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போதும் கல்முனை தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கல்முனை வைத்தியசாலை சென்று அவ் அம்மாவின் அடிப்படை தேவைகளான உணவு உடை, நம்பிக்கை வழங்கி வருகின்றார்கள்.

37Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*