பல்கலைக்கழகங்கள மாணவர்கள் அவதானம்! தவறினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை…

பல்கலைக்கழகங்களில் பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாற நாடளாவிய ரீதியில் அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

1998 ஆம் 20 ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அவ்வாறு பகிடி வதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிரான இந்த சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறை படுத்தப்படவில்லை என தெரிவித்த அமைச்சர் இம்முறை முழுமையாக நடைமுறை படுத்தப்படும் என தெரிவித்தார்.

அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களின் உப வேந்தர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்

123Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*