சர்வதேச முத்த தினம்..! முத்தத்தில் இத்தனை வகையா..?! யாருக்கு எங்கு முத்தம் கொடுக்க வேண்டும்.?

அன்பை வெளிப்படுத்த மிகவும் பெரிய ஆயுதமாக கருதப்படுவது வழக்கம். அந்த அவகையில் இன்று உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இன்றைய தினம் முத்தம் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

ஒருவருக்கு இன்னொருத்தர் மீது அன்பு பாசம் இருக்கும் தருவாயில், அவர்களை எந்த அளவிற்கு நாம் விரும்புகிறோம் என்பதை உணர வைக்கும் ஒரு ஆயுதம் தான் முத்தம்

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் நொடி பொழுதில் பறந்துப்போக மிகவும் உறுதுணையாக இருப்பது முத்தம் தான்.

அது நண்பர்களாக இருந்தாலும் சரி, கணவன் மனைவியாய் இருந்தாலும் சரி, காதலன் காதலி என இருந்தாலும் சரி….யாராக இருந்தாலும் முத்தம் கொடுத்து விட்டால் அந்த பிரச்சனை சரி ஆகி விடும்.

சர்வதேச முத்த தினம்

சர்வதேச முத்த தினத்தை ஒட்டி, உலக நாடுகள் பல முத்த தினத்தை, தனக்கு பிடித்த நபர்களுக்கு முத்தம் கொடுத்து கொண்டாடி வருகின்றனர்

முத்தத்தில் பல வகை

நேற்று, கன்னம், உதடு என பல இடங்களில் முத்தம் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதில் நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் உண்மையில் மிக சிறந்த ஒன்று…நெற்றி முத்தம் பொறுத்தவரை பெற்றோர்கள் நண்பர்கள் வாழ்க்கை துணை என இவர்களுக்கு இந்த முத்தம் கொடுக்கப்படுகிறது

கன்னத்தில் முத்தம் அதிக அன்பின் காரணமாக நண்பர்கள், உறவினர் என எதாவது நிகழ்ச்சியில் கன்னத்தில் முத்தமிடுவது வழக்கமாக உள்ளது

கையில் முத்தம்

திருமண நிகழ்வுகளில், தன்னுடைய துணைக்கு மாறி மாறி கையில் முத்தமிட்டுக்கொள்ளும் கலாசாரத்தை பார்க்க முடியும்

உதட்டில் முத்தம்

அன்பு காதல் கலந்து எப்போது காமத்திற்கு செல்கிறதோ அப்போது உதட்டில் முத்தம் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு முத்தத்தில் பல வகை இருந்தாலும், எந்த இடத்தில் யாருக்கு முத்தம் கொடுக்கிறோம் என்பதில் உள்ளது பொருள். ஆக மொத்தத்தில் இன்றைய தினத்தில் சர்வதேச முத்த தினம் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது

20Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*