யாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்!! கொதிப்பில் இளைஞர்கள்..

அர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.

அதி­லும் எம்­ம­வர்­க­ளில் இருந்து, எமது இளை­ஞர்­க­ளின் கட்­டுக்­குள் அடங்­காத போக்­கு­க­ளில் இருந்து கலா­சா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளமை பெருந்­து­யர்.

அவ்­வா­றாக எமது கலா­சா­ரம், பண்­பா­டு­கள், விழு­மி­யங்­கள் என்­பன வெட்­டிச் சரிக்­கப்­ப­டும் இடங்­க­ளின் ஒன்­று­தான் இந்­தத் தல்­செ­வென கடற்­கரை.

அமைதி தேடிச் செல்­த­லும் கொதித்­துப்­போய் வரு­த­லும்

வேலைப்­பளு, அழுத்­தம், பர­ப­ரப்பு, பதற்­றம் இவற்றை ஓர­ள­வே­னும் தம்­மி­டத்­தில் இருந்து தொலைத்­து­விட வேண்­டும் என்று பல­ரும் தெரி­வு­செய்­யும் ஓர் இட­மா­கத் தல்­செ­வன கடற்­கரை அமைந்­துள்­ளது.

ஆனால் காதல் என்­னும் போர்­வைக்­குள் இளை­யோர்­கள் அங்கு மேற்­கொள்­ளும் காம வெறி­யாட்­டங்­களை சகிக்க முடி­ய­வில்லை.

எனி­னும் பொழு­து­போக்க வந்­தி­ருந்து எல்­லை­மீ­றா­மல் தமக்­கி­டையே வார்த்­தை­க­ளைப் பரி­மா­றிக் கொள்­ளும் காத­லர்­க­ளும் இருக்­கி­றார்­கள்­தான். அவர்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் விதி­ வி­லக்­கா­ன­வர்­கள்.

காத­லர்­கள் என்­றால் வெளி­யி­டங்­க­ளுக்­குத் தனி­யா­கச் செல்­லத்­தான் செய்­வார்­கள். அதற்­கா­கக் காதல் என்­ப­தன் புனி­தம் அற்­று ­போ­கும் வகை­யில் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எங்­க­ணம் நோக்­கு­வது…?

நீங்­கள் பேச­வேண்­டி­ய­வற்றை தனி­யா­கத்­தான் இருந்து பேச­வேண்­டுமா? பேசுங்­கள், மனம்­விட்டு பேசுங்­கள், உங்­க­ளுக்­குள் இருக்­கும் பிரச்­சி­னை­களை பேசித்­தீ­ருங்­கள், மன­தில் இருப்­ப­வற்றை பரி­மா­றுங்­கள்.

இவற்­றுக்கு எதற்கு மறை­வான பிர­தே­சங்­க­ ளும், பற்­றை­க­ளும், பாறை­க­ளும், பொந்­து­க­ளும்….??? ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ! யாம் அறி­யோம் பரா­ப­ரமே.

அனு­ப­வம்

ஓர் உண்­மைச் சம்­ப­வம். இளை­ஞர்­க­ளாக ஒன்­று­சேர்ந்து பொழு­து­போக்­கு­வ­தற்காக காங்­கே­சன்­துறை தல்­செ­வென கடற்­க­ரைக்குச் சென்­றி­ருந்­தோம்.

சரி நாங்­கள் ஓரி­டத்­தில் இருந்து அரட்டை அடிப்­போம் என்று கடற்­க­ரை­யின் ஒரு­ப­கு­திக்­குச் சென்­றி­ருந்­தோம்.

அங்கு பார்த்­தால் ஓரிரு காதல் ஜோடி­கள் அமை­தி­யான முறை­யில் தமக்­கி­டை­யில் கருத்­து­களை பரி­மா­றிக்­கொண்­டி­ருந்­த­னர்.

சரி நாம் ஏன் அவர்­களை தொந்­த­ரவு செய்­வேண்­டும் என எண்ணி, கடற்­க­ரை­யின் இறு­திப் பகு­திக்­குச் சென்­றோம். அங்கு உடைந்த பழைய தடுப்­ப­ணை­க­ளும், பாறை­க­ளும் சூழ்ந்து கற்­க­ளாக காணப்­பட்­டது.

எட்­டிப்­பார்­போம் என பார்த்­தால் ஒவ்­வொரு கற்­க­ளின் இடை­வெ­ளி­யி­லும், பொந்­து­க­ளி­லும் ஒவ்­வொரு ஜோடி­கள்.

இந்­தப் பத்­தி­யில் முன்­னர் குறிப்­பிட்­டது போல ஏதே­னும் ஆய்­வா­கக்­கூட இருக்­க­லாம். கேட்­டால் காத­லர்­க­ளாம்.

நல்­ல­வே­ளை­யாக இந்­திய வீட்­டுத்­திட்­டக் குழு இந்­தக் காட்­சி­க­ளைப் பார்கவில்லை. பார்த்­தி­ருந்­தால், குடித்­த­னம் நடத்­து­வ­தற்கு ஏன் பத்து, பதி­னைந்து லட்­சம் பெறு­ம­தி­யான வீடு­கள் சிறு குகை­களே போதுமே என்ற முடி­வுக்கு வந்­து­வி­டு­வார்­கள்.

நாங்­கள், என்ன இதுவென்று சலித்­துப் போயி­ருக்க இன்­னொரு இளை­ஞர் குழு­வொன்று அங்கு வந்­தது.

அவ்­வாறு ஒழிந்­தி­ருந்­த­வர்­க­ளை­யும் பதுங்­கி­யி­ருந்­த­வர்­க­ளை­யும் தேடித்­தே­டிப் பிடித்து விரட்­டி­னார்­கள். ‘‘நீங்­கள் துரத்­தி­னால் துரத்­துங்­கள் எங்­க­ளுக்கு இந்த இடம் இல்­லை­யென்­றால் வேறு இடம் கிடைக்­கா­மலா போய்­வி­டும்.

அங்­கி­ருந்து நாம் ஆய்­வைத் தொட­ரு­வோம்’’ என்று சொல்­லா­மல் சொல்­லி­ய­படி அவர்­கள் நகர்ந்­தார்­கள். சில பெண்­கள் ‘‘விப­சார வழக்­கில் சிக்­கிக்­கொண்ட பெண்­க­ளைப் போன்று’’ துப்­பாட்­டா­வால் தமது திரு­மு­கங்­களை மூடிக்­கொண்­டனர்.

கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை

இத்­த­கைய கலா­சார சீர­ழி­வு­ க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம். இதற்­கான இரண்டு திட்­டங்­கள் மன­தில் ஆழ ஊடு­ரு­வு­கின்­றன.

ஒன்று, இதற்­கா­கவே சில இடங்­களை அமைத்­துக் கொடுப்­பது. ஆம், மேற்­கத்­திய நாடு­கள் இது­போன்ற நட­வ­டிக்­கை­களை ‘தனிப்­பட்ட சுதந்­தி­ரம்’ என்ற வரை­ய­றைக்­குள் வைத்­துள்­ளன. ஒரு விதத்­தில் அது சரி­யா­ன­தும் கூட. இத­னால் அத்­த­கைய நாடு­க­ளில் காத­லர்­கள் செல்­வ­தற்கு என்று ஏரா­ள­மான இடங்­கள் உள்­ளன.

இங்கு அவ்­வா­றான இடங்­களை அமைத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­விட்­டால் கண்ட இடங்­க­ளி­லும் இவ்­வாறு கலா­சா­ரம் சிக்­கிக் சின்­னா­ பின்­ன மா­காது.

இரண்­டா­வது, திரு­டர்­க­ளைப் பிடிக்க விழிப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­ட­தைப் போன்று, இந்­தக் கலா­சா­ரத் திரு­டர்­க­ ளை­யும் பிடிப்­ப­தற்கு சில குழுக்­களை நிறுவி தல்­செ­வன, கசூ­ரினா, கோட்டை என்று இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அவ­தா­னிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் நிறுத்­து­வது.

எனி­னும், தனி­ம­னித மனங்­க­ளில் ஏற்­ப­டும் மாற்­றமே அனைத்­தை­யும் விட மேலா­னது. அதுவே ஆகச்­சி­றந்த நட­வ­டிக்­கை­யும்­கூட.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*