கிளிநொச்சி பகுதியில் குழந்தைகளுடன் 10வருடங்களின் பின் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் இன்று நடத்தப்பட்டது.

பதிவாளர் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர், ஆள்பதிவுத்திணைக்களம், பொலிஸ், தபால், சமூகசேவைகள், சமூர்த்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மோட்டார் போக்குவரத்து, சட்ட விரோத ஆணைக்குழு, மின்சார சபை, தேசிய வீடமைப்பு, ஊழியர் சேமலாக நிதி, மத்திய வங்கி, அரசகரும மொழிகள், சுகாதார திணைக்களம், போன்ற திணைக்களங்களின் சேவைகள் இங்கு இடம்பெற்றன.

இதன் போது, சட்ட ரீதியாக திருமணம் செய்யாது சுமார் 10 வருடங்களாக இல்லறவாழ்வில் இணைந்திருந்த நான்கு தம்பதிகளுக்கு சட்ட ரீதியான திருமண பதிவினை மேற்கொண்டதுடன், திருமண சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

இதேவேளை குறித்த நடமாடும் சேவையில் முதியோர் அடையாள அட்டைகள், பிந்திய பிறப்புச் சான்றிதழ்கள், உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டதுடன், பூநகரி கோட்டத்திற்குட்ப்ட்ட பாடசாலைகளில் வறுமைக்குாட்டின் கீழ் உள்ள 500 பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை சீருடை துணிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக மாவட்டச் செயலர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலளர் கிருஸ்ணேந்திரன்உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*