கருணாநிதிக்கு திடீரென நடந்தது என்ன?அவசரமாக காவேரி வைத்தியசாலையில் குவிந்த குடும்பத்தினர்

தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவசர அவசரமாக ராஜாத்தியம்மாள், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீர் சுகயீனம் அடைந்த கருணாநிதி காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். அவரது உடல்நலம் முன்னேற்றமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், தற்போது அவசர அவசரமாக ராஜாத்தியம்மாள், ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.

இதனிடையே, சேலத்தில் நிகழ்ச்சிகளை இரத்து செய்து விட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், வைத்தியசாலைக்கு முன்பாக தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளதாகவும், இதனால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*