ஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

வவுனியா நொச்சிமோட்டை பாலத்தின் ஒருபகுதி உள்ளிறங்கியுள்ளமையால் அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பாலம் அடிக்கடி இவ்வாறு சேதமடைவதாகவும், பின்னர் தற்காலிகமாக அதிகாரிகளால் சேதமடைந்த பகுதி மட்டும் திருத்தப்படுவதாகவும், தவிர நிரந்தரமாக அப்பாலம் அமைப்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பாலமானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருப்பதுடன் A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களின் பிரதான போக்குவரத்து மையமாக காணப்படுகின்றது.

இதனால் இப்பகுதிகளுக்கு இந்த பாலம் ஒன்றின் ஊடாகவே பயணத்தை மேற்கொள்ள முடியும். அத்துடன் ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாலத்தை தமது போக்குவரத்து தேவைக்காக பயன்படுத்துகின்றன.

எனவே அதன் முக்கியத்துவம் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பாலத்தை நிரந்தரமாக அமைப்பதற்கு, மக்கள் நலனை கருத்தில் கொண்டு காலம் தாழ்த்தாது விரைவாக புதிய பாலம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதியை சேர்ந்த மக்களும் தொடர்ந்து இப்பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் தெரிவித்துள்ளார்கள்.

95Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*