ஆஹா! இதுவல்லவா காதல்… கணவன் உடலை கட்டித் தழுவியபடியே இறந்த மனைவி

உக்ரைனில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர், இறந்துபோன கணவனின் உடலை அணைத்தபடியே, மனைவியும் இறந்திருப்பது தொடர்பான எலும்புக்கூடு கண்டறிப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைனில் Ternopil பகுதி அருகே உள்ள Petryki கிராமத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிலர் ஆய்வு மேற்கொள்ளும்பொழுது ஜோடியாக இருந்த எலும்புக்கூடு ஒன்றினை கண்டெடுத்தனர். ஆனால் அந்த எலும்புக்கூடு இருந்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் எலும்புக்கூடு என தெரிவித்துள்ளனர்.

இறந்த கணவனை தனியாக அனுப்ப மனமின்றி, தானும் அவருடனே இறக்க வேண்டும் என விரும்பியே மனைவியும் இறந்துள்ளார். தான் இறக்கும்போது வலியில்லாமல் இருப்பதற்காக விஷம் குடித்திருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கண்டுபிடித்த சமாதியில், கணவன் உடல் அருகே மிகுந்த காதலோடு அவனது கழுத்தின் பின்புற கைகள் நுழைத்து தோளை அணைத்தபடி அவனது நெற்றியோடு தனது நெற்றியை வைத்து நேர்பார்வை பார்த்தபடி அந்த பெண் இறந்து போயிருப்பதாக எலும்புகளின் படுத்திருந்த வடிவத்தை வைத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

நேர்மையற்ற முறையில் வெறும் பண மற்றும் உடல் ஆசைக்கு மட்டுமே ஆண்களும், பெண்களும் காதலித்து வரும் இவ்வுலகில் இதுபோன்ற காதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது நெகிழ்ச்சியை அளிக்கிறது.

[embedyt]https://youtu.be/1FXs1ebWIBI[/embedyt]

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*