இன்று மட்டு வெபர் அரங்கில் கூட்டுறவு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மனங்கெட்ட தமிழர்கள் அனைவரும் கலந்து சிறப்பியுங்கள்!

இன்று மட்டு வெபர் அரங்கில் கூட்டுறவு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் மனங்கெட்ட தமிழர்கள் அனைவரும் கலந்து ஜனாதிபதி மைதிரியியையும் நல்லாட்சியையும் ஆதரித்து அவர்களின் ஆட்சியை பலப்படுத்துங்கள்.

#காரணம் இதுவரை ஜனாதிபதி.,

1.ஆனந்த சுதாகரின் விடுதலையை வழங்கிய வாக்குறிதியின் அடிப்படையில் உடனடியாக ஏற்படுத்தி தந்துள்ளார்.

2.காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்தை முடிவுக்கொண்டுவந்து அவர்களுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தந்துள்ளார்

3.புதிய அரசியல் அமைப்பை 3-2 பெரும்பான்மையுடன் வெற்றி பெற சிங்கள அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் இறுக்கமான முடிவை அறிவுத்துள்ளார்

4.போர் குற்ற படைவீரர்களை சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழுவின் உதவியுடன் விசாரணை செய்து உடனடியாக தண்டிப்பேன் என உறுதி அளித்துள்ளார்.

5.அதிகபடியான ஆசனங்களை பெறும் கட்சிக்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைமை பதவியை நல்லாட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதுக்கு அமைவாக மட்டு அபிவிருத்தி குழு தலைமை பதவியை தமிழருக்கு வழங்கியமை

6.தேர்தலில் தோல்வி அடைந்த நடுநிலைவாதி காத்தான்குடி மன்னர் கோயிலை இடித்து நீதிபதியை மாற்றி தமிழருக்கு மிகபெரும் நன்மையை செய்தவருக்கு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற ஆசனமும் வழங்கி மூன்று முஸ்லீம் உறுப்பினருக்கும் அமைச்சு பதவி வழங்கி மட்டு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு பாரிய நன்மை செய்தமை

7.தமிழர் பிரதேசங்களும் கிழக்கு மாகாண பழமையான அதிகம் நோயாளிகள் சிகிச்சை பெறும் ஆதார வைத்தியசாலைகள் பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டமை

8.சட்டவிரோதமற்ற முறையில் மக்களின் அடிப்படை வசதிகள் மீறப்படாது தொழிற்சாலைகள் நிறுவ அங்கிகாரங்கள் வழங்கபட்டதுடன் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது

9.பட்டதாரிகள் நியமனம் ,தொண்டர் ஆசிரியர் நியமனம் வைத்தியசாலை சிற்றுழியர் நியமனங்களில் தமிழர்களை புரக்கணிக்காது அநீதி இன்றி பெரும்பாலான நியமனங்களை வழங்கியமை

10.கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் மட்டு போதனா வைத்தியசாலையினை தமிழர் நிர்வாகம் செய்யவும் படிப்பினை மேற்கொள்ளவும் கடமைபுரியவும் சிங்கள மொழியில் தேர்ச்சி அடையவும் அதிகம் கஷ்டப்படாமல் இருக்க சிங்கள மயமாக மாற்றியது.

11.இயற்கை அனர்த்தம் மற்றும் அரச அதிகாரிகளினால் பாதிப்படைந்த வயல் நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் உடனடியாக அரச நிவாரணம் வழங்கியமை

12.மட்டக்களப்பு கால்நடைகளுக்கான மேச்சல்தரைக்கு நிரந்தர தீர்வை பெற்றுதந்தமை

13.சட்டவிரோத காணி அபகரிப்பு சகோதர மக்களின் அத்துமீறிய மீள்குடியேற்றங்களை தடுத்து அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தியது

14.புணர்வாழ்வு மற்றும் பெண்தலைமை குடும்பங்களுக்கு தொழிழ்வாய்ப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் சிறந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியது

15.விஜயகலா அமைச்சர் தேசியபாதுகாப்புக்கும் இனநல்லுறவை சீர்குழப்பும் வகையில் பேசியதால் தமிழர் என்ற ஒரே காரணத்தால் உடனடியாக விசாரணையை மேற்கொண்டமை

16. கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை உட்பட எனைய இரு மாகாணசபைகளுக்கான தேர்தலை காலம் தாழ்த்தாது ஜனநாயக அடிப்படையில் நடத்தி அதற்கான அதிகாரங்களை வழங்கியமை

இன்னும் பல நன்மைகளையும் அதிகாரங்களையும் அடிப்படை உரிமைகள் வசதிகளை உறுதிப்படுத்தியும் வழங்கியும் நல்லாட்சியை வழிநடத்தும்

இவரை தவறாது சென்று வாழ்த்தி அவரது ஆட்சியை தமிழர்களாகிய நாம் பலப்படுத்துவோம்.

Via: Vijayaluxmanan Yoganathan

49Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*