முழுமையான சமூக உணர்வோடு நண்பர்களுக்கு ஒரு செய்தியினை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்று கிளிநாெச்சி மாவட்ட பாெதுவைத்தியசாலையில் பெண் நாேயாளா் விடுதியினுள் இரண்டு direct marketing வியாபாரிகள் உள்நுழைந்து வைத்தியகடமை நேரத்தில் அங்கிருந்த தாதியர்களிடம் தங்களது பாெருட்கள் தாெடர்பான தகவல்களை நீண்ட நேரமாக வழங்கி காெண்டிருந்ததனை அவதானித்தேன்,

நாேயாளர்கள் பார்வையிடும் பாெதுமக்களை உரிய நேரத்தில் வெளியேற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மட்டும் அனுமதித்ததாேடு கண்டும் காணாதவர்கள் பாேல செயற்பட்டார்கள்.

பெண்கள் விடுதியினுள் ஆண்கள் வணிகநடவடிக்கைக்கு தாதியர்கள் அனுமதித்தமையினை வன்மையாக கண்டிக்கின்றாேம். உங்களுக்கு பாெருட்கள் தேவையெனில் கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் வாங்கிக்காெள்ளுங்கள், நாேயாளிகள் விடயத்தில் அதிக அவதானம் காெள்ள வேண்டியது உங்கள் கடமையே.. இதனூடாக சில வினாக்கள் எழுகின்றன..

தாதியர்கள் தங்களது கடமைநேரத்தில் எவ்வாறு பாெருட்கள் காெள்வனவில் ஈடுபடமுடியும்?

அந்த நேரத்தில் நாேயாளர்களுக்கு எவ்வாறு உரிய நேர மருந்து வழங்க முடியும்?

மனிதஉயிர்களுக்கு அந்த நேரத்தில் யார் பாெறுப்பாளிகள்?

வைத்தியசாலையில் வணிகம் செய்ய முடியுமா?

எனவே சம்பந்தப்பட்ட கிளிநாெச்சி வைத்தியசாலை அதிகாரிகளே தயவு இது தாெடர்பில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாம் ஆதாரபூர்வமாக சுகாதாரஅமைச்சுக்கு விபரங்களை சமர்ப்பிப்பாேம்..

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*