சவுக்கடி பொது அமைப்புக்களின் அனுமதி இன்றி காணி விற்கவோ வாங்கவோ முடியாது!

சவுக்கடி கிராமத்தில் பறிபோகும் தமிழர்களின் பூர்வீக காணிகளை பாதுகாத்து இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் கிராமங்கள் தோறும் காணி பாதுகாப்பு குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக சவுக்கடி கிராமத்தில் காணி பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதில் பல தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி அபகரிப்பு அதிகரித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்களினால் குறித்த திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

503 கெக்ரேயர் பரப்பளவை கொண்ட சவுக்கடி கிராமத்தில் யுத்தத்திற்கு பின்னர் பல நூறு ஏக்கர் தமிழர்களின் காணிகள் பரிபோயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சவுக்கடியில் உள்ள தமிழ் மக்கள் தங்களது காணிகளை இனிமேல் மாற்று இனத்திற்கு விற்க முடியாது.

மீறி விற்பனை செய்பவர்களை இனிமேல் ஊரை விட்டு தள்ளி வைப்பதுடன் அவர்களுடன் ஊரில் உள்ளவர்கள் உறவை வைக்க முடியாது.

[embedyt]https://youtu.be/rhwFLytRZDc[/embedyt]

இனிமேல் சவுக்கடியில் காணி விற்பதாக இருந்தாலும் வாங்குவதாக இருந்தாலும் ஊரில் உள்ள கோயில் தேவாலயம் மற்றும் பொது அமைப்புக்களின் அனுமதி பெறப்பட வேண்டும்.

அரச காணிகளை வெளியில் உள்ளவர்களுக்கு குத்தகைக்கோ அல்லது அபிவிருத்தி திட்டங்களுக்கோ அதிகாரிகள் வழங்கும் போது பொதுமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்.

இங்குள்ள பொதுமக்களின் விருப்பம் இல்லாமல் அத்து மீறி மாற்று இனத்தவர்கள் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அதனை சம்பந்தப்பட்ட மாற்று இன அமைப்பின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்.

முஸ்லீம் மத அமைப்புகளுடன் பேசி நல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்தல்.

காணிகளை பிடித்து நல்லிணக்கத்தை குழப்பி இன வன்முறையை தூண்டும் சம்பவங்களையும் நபர்களையும் பொலீசாரின் உதவியுடன் தடுக்க முற்படுதல்.

பொலீஸ் அதிகாரிகளை அழைத்து கூட்டங்களை நடாத்தி சட்டவிரோத காணி அபகரிப்பை தடுக்க முயற்சி செய்தல்.

நல்லிணக்க அமைச்சின் குழுக்களை அழைத்து இன விரோத செயற்பாடுகளை பேசி தீர்வு காணல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி

நிலவன் நிலா.

66Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*