முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸவரன் அவர்களிற்கும் தறபோதைய பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களிற்குமிடையேயான ஒத்த ஒவ்வாத இயல்புகள் ஒருபார்வை.

நேற்று மூத்த ஊடகவியலாளர் ஒருவர் இருவரும் வணிக பின்னணியைக் கொண்ட அரசியல் வாதிகள் என குறிப்பிட்டிருந்தார்.மகேஸ்வரன் ஈபிடிபி யினரோடு கொண்டிருந்த வணிக பின்னணி கொண்ட பிரச்சினைகளின் அடிப்படையில் அரசியலுக்கு வந்தவர்.பெரும்பான்மையின ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்துசெயற்பட்டாலும் தனது இனம் சார்ந்த உணர்வுகளை உணர்த்த உணர அவ்வப்போது பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதயமான நேரம் யாழ் மாவட்டத்தில் நேரடியாக தமிழ்த்தரப்போடு மோதாது கொழும்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.இந்து விவகார அமைச்சராக.இருந்த போது தனது அரச பணி முத்திரையை இந்து மத வெளியீடுகளை தபாலில் விநியோகிக்க உதவினார்.சகல ஆலயங்களிற்கும் எந்த வித கமிசனும் பெறாமல் உதவினார்.முன்னர் குறித்த ஒரு அரசியல் கட்சி இத்தகைய அறக்கொடைகளின் போது கட்சிக்காக பிடித்து வைத்தல் வரிஅறவிட்டமை அனைவரும் அறிந்தததே. கப்பல் ஓடமுடியாமையால் அரசியலுக்கு வந்த மகேஸ்வரன் தம் முதல் வெற்றியை யாழில் பதிவு செய்த போது அரசியல் விமர்சகர் செட்டி அச்சக சங்கர் யாழ் இந்து வின் பௌர்ணமி கலந்துரையாடலில் நீண்ட இடை வெளிக்குப்பின்னர் சிங்கள கட்சியான ஐதேகா பெற்ற வெற்றி தனிமனிதனான மகேஸ்வரனுக்கு கிடைத்த வெற்றியே தவிர அந்தக்கட்சிக்கான வெற்றியாக கருத முடியாது என்றார்.தன் இனம் எங்கிருந்தாலும் இனம் மீதான தனது தார்மீக பொறுப்பினைத்தட்டிக் கழிக்கவில்லை.காலம் காலமாக கொழும்பில் வதிந்த தமிழர்களை மகிந்த அரசாங்கம் அதிகாலை வேளை லொட்சுகளிலும் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களையும் வன் முறையாக கொழும்பிலிருந்து வெளியேற்ற முயற்சித்த போது பாராளுமன்றத்தில் தனது மேற்சட்டையைக் கழற்றி எறிந்து கலகம் செய்து அப்போதைய முயற்சியை தடுத்தார்.மகேஸ்வரன் தனது தவறிய தொலைபேசி அழைப்புக்களிற்கு மீள் அழைத்து ஆகக் கூடுதலான தனிப்பட்ட அக்கறையை காண்பித்தார்.தான் ஆட்சி அதிகாரத்திலிருந்த போது அதனைப்பாவித்து தனது வியாபாரத்தை மேம்படுத்தியதிலும் பார்க்க சாதாரண மனிதனாக இருந்த போது தனது பணபலத்தை பயன்படுத்தி அப்பாேதைய அரச இயந்திரத்தின் மூலம் வணிகத்தில் உச்ச நிலையடைந்தமை உண்மை.முட்டைகளை விமானத்தில் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு விற்றமை.ரெலிகொம் இணைப்பை பின் கதவால் பெற்று உள் வரும் அழைப்புக்களிற்குகூட தானே தனது ஸ்ரான்லி வீதிக்கடையில் நின்று கணிசமான பணம் அறவிட்டமை நினைவு கூரத்தக்கது.பயணிகள் கப்பல் சேவை ஏலத்தில் தனி ஒருவனாக நின்று ஏலத்தில் கப்பலை வாங்கி சாதனை படைத்தார்.இவரது எரிபொருள் விற்பனையை நினைவு படுத்துமுகமாக அவரது பெயரிற்கு அடை மொழியாக தென்னிலங்கை பத்திரிகைகள் சித்தரித்தமை வரலாற்றுப்பதிவாகும்.பல கொடைகளை பிரதியுபகாரம் கருதாமல் ஊழலற்று செய்தாலும் தனது சொந்த பணத்தில் குறிப்பிடத்தக்க கொடையை புரிந்ததில்லை.விதி விலக்காக தனது சொந்த மண்ணான காரைநகர்ப்பிரதேச ஆலயங்களிற்கு நேர்த்தி வகையில் தனது சொந்தப் பணத்தில் கொடை வழங்கியமை மட்டும் சொல்லக் கூடிய விடயமாகும்.அதிக பழைமை வாத கருத்துக்களை நம்பிக்கைகளை தன் வசம் மகேஸ்வரன் வைத்திருந்தமை உணரப்பட்டது.தமது வீட்டிற்கு சலவையக உரிமையாளரை அழைத்து அவரில் முழுவியளமாக விழிப்பதை அமைச்சராக உள்ள போதும் கொண்டிருந்தார்.இது அவர் வணிக துறை சார்ந்த நுட்பமான அறிவை மட்டும் கொண்டிருந்தமையை சுட்டி நிற்கின்றது.மேல்தட்டு வணிக வர்க்கத்திற்குரிய ஐதேக கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தினாலும் எளிமையாகவே மகேஸ்வரன் அடையாளம் காணப்பட்டார்.ஆனால் அவரது மனைவி தவிர்ந்த அவரது அரசியல் வாரிசுகள் சிலர் அமைதியாக யாழ்ப்பாணத்தில் கோட்டல் நிறுவி தமது பொருளாதார மேம்பாட்டை மட்டும் செயற்படுகின்ற போதிலும் வணிக எழுச்சியுடன் கூடிய ஐதேக அவர்களிற்கும் சில அரசாங்க பொறுப்புக்களை உதாரணமாக பனைஅபிவிருத்திச்சபை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.சமூகத்திற்கு மகேஸவரின் அந்த குடும்பவாரிசு எந்தக் கெடுதலையோ நன்மைகளையோ புரியவில்லைத்தான்.இன்னும் சில மகேஸவரனின் அரசியல் வாரிசுகள் யாழ்ப்பாண சமூக மட்டத்தில் அதிக அதிருப்தியை அவர்களின் போக்குவரத்துத் துறை சார்ந்த உழைக்கும் வர்க்கத்தினர் வெளிப்படுத்தியிருந்தனர்.இனி மஸ்தான் வவுனியாவை சொந்த இடமாகவும் ஆரம்பக்கல்வியை வவுனியா சிவப்பிரகாச வித்தியாலயத்தில் பயின்று உயர் கல்வியை மல்வானை சாகிராவிலும் கற்றுள்ளார். இவரும் வன்னி யுத்தம் முடிந்த கையோடு தனது பொருளாதார வளத்தை அதிகம் பெருக்கியுள்ளார். யுத்தத்தில் கைவிடப்பட்ட கால்நடைகளை ஏதோ ஒரு வகையில் பெற்று அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளார்.இங்கே எழும் கேள்வி என்ன வழியில் அநாதரவான கால்நடைகள் பெறப்பட்டன என்பதாகும்.இந்த இடத்தில் முன்னைய முட்டை,ரெலிபோன் நிலைமைாபோன்றே சில விசேட வணிக சூக்குமங்கள் பயன்பட்டிருக்கலாம்.இங்கே கால்நடைகள் கொள்வனவு உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை. உரிமையாளர்களை அவற்றின் பெறுமதி சென்றடையவில்லை.ஆனால் மகேஸ்வரன் உரிய முறையில் கொள்வனவு செய்து அவற்றை யாழ்ப்பாணம் கொண்டு சேர்க்கும் முறையில் விசேட வணிக சூத்திரங்களை கையாண்டுள்ளார். செட்டி நட்டம் ஊர்மேலே என்பது போல போரினால் இடம்யெர்ந்த யாழ் மக்களிற்கு தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்றமை உண்மைதான்.மஸ்தான் மகேஸ்வரன் போலேவே ரிஷாத்தின் பாதிப்பாலேயே அரசியலுக்குத் தள்ளப்பட்டார்.இதனை வேறு விதமாக யாழ்ப்பாண முஸ்லீம்களிடையே ஒஸ்மானியாவில் கடந்த ஆண்டு உரையாற்றும் போது “அரசியல் என்னும் சாக்கடையில் காலம் தன்னை வீழ்த்தியதாக குறிப்பிட்டதிலிருந்தும் தனது தந்தையோடு வியாபாரமும் கொடையுமாக இருந்த தான் தனது பிரதேச அரசியல் வாதிகளின் பேதமான செயற்பாட்டினால்.அரசியலுக்கு தள்ளப்பட்டதாக கூறியுள்ளமை யிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.இங்கே அரசியல் முலாம் பூசப்படுமுன்னரும் பின்னரும் மஸ்தான் தனது தனிப்பட்ட பணத்தை உதவி என்று வருபவர்களிற்கு இனம் மத வேறுபாடின்றி வழங்கியமை இன்றும் அனைத்து வன்னி மக்களால் நன்றியோடு நினைவு கூரப்படுகின்றன.இங்கே முன்னயை இந்து விவகா ர அமைச்சரிடமிருந்து வேறு பட்டு தறபோதைய பிரதி அமைச்சர் நிற்கின்றார்.வவுனியா நகர அபிவிருத்திக்கு மஸ்தானின் சட்டைப் பையிலிருந்து குறிப்பிடத்தக்க பணம் செலவாகியுள்ளமை உறுதி.ஆனாலும் சிறுபான்மை தமிழ் பேசும் தன் முஸலீம இனத்திற்காக மட்டுமே அரசியல் ரீதியாக குரல் கொடுத்துள்ளார்.மேலும் உறுதியற்ற தளம்பல் கொள்கைகள் சுதந்திரக் கூட்டமைப்பில் கேட்டு விட்டு ஜதேக பக்கம் சாய்ந்த ஒரேயொரு எம்பி கடந்த முறை இவர்மட்டுமே.இவரது வாரிசுகளது பெயரிலே பல கால்நடைக்கொல்களங்கள் கடைகள் பெற்றோல் செட்டுக்கள் பதியப்பட்டிருந்தாலும் அதிகார துஸ்பிரயோகம் குறைவாகவேகாணப்படுகின்றன.மேலும் வாய்தடுமாறித்தன்னும் மஸ்தானின் வாயில் இனவாதம் வந்ததில்லை என வவுனியா தமிழ் தரப்பின் கருத்து.இவரின் அதிகாரத்திற்குட்பட்டஇந்து விவகாரதிணைக்களம் பாரிய வேலைத்திட்டங்கள் நிறைந்ததல்ல.கோயில் பதிவுகள் ஆய்வுகள் விருதுகள் முதலியனவாகும்.இவரது நியமனத்தை இரண்டு வகையில் நோக்கலாம்.தற்போது சமூக மட்டங்களில் மார்க்க முரண்பாடு கண்ட இந்துசமயத்திற்கு சேவையாற்று மாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அல்லது உணர்வு பூர்வமாக எம் மதத்தை இழிவு படுத்த எடுத்த முயற்சியாகவும் கொள்ளலாம்.ஆனால் இந்துக்கள் மண்டியிட்டு அவரிடம் பெறவேண்டிய அவல நிலை இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும் காலம்தான்…

Loading...
13Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*