முஸ்லிம் அமைச்சரால் பொங்கியெழுந்த தமிழ் மக்கள்; மட்டக்களப்பில் சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் புல்லுமலை பகுதியில் 100 ஏக்கர் காணியில் குடிநீர் போத்தல் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கும் செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கோரி, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (Muslim Minister land scam Controversy Batticaloa)

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் தனியார் காணி எனக்கூறி சுமார் 100 ஏக்கர் காணியில் போத்தல் தொழிற்சாலையொன்றை அமைக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது.

குறித்த தொழிற்சாலை சவூதி நிறுவனம் ஒன்றின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அரச காணிகள் என்றும் தனியார் காணி என்றும் மிகவும் திட்டமிட்டு அபகரிக்கும் நடவடிக்கையில் இராஜாங்க அமைச்சர் ஹஸ்புல்லா இறங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை செங்கலடி பிரதேச செயலாளரோ அல்லது அரசாங்க அதிபரோ வழங்கவில்லை என்பதுடன் தொழிற்சாலை அமைப்பதற்கான எந்தவிதமான அனுமதிகளும் பெறப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மிக முக்கியமாக குறித்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை என்பதுடன் பிரதேச அபிவிருத்திக் குழுவில் கூட அது குறித்து ஆராயப்படவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த தொழிற்சாலை தொடர்பாக புல்லுமலை பொதுமக்கள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனிடம் முறையிட்டுள்ள நிலையில், இது குறித்து நாளைய தினம் முடிவெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் வெளிநாடுகளின் பொருளாதார உதவியுடன் மட்டக்களப்பு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கிறாரா? என்ற சந்தேகம் பொதுமக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை அபகரித்தமை மற்றும் வாகரையில் ஒரு தீவு உட்பட பல ஏக்கர் தமிழர்களின் காணிகளை பெருந்தொகை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோன்று ஏறாவூர்பற்று பிரதேசத்தில் தளவாய், சவுக்கடி, களுவன்கேணி, குடியிருப்பு, ஐயன்கேணி போன்ற பகுதிகளில் சில தமிழ் தரகர்களை வைத்து அரச மற்றும் தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து அதில் முஸ்லிம் குடும்பங்களை குடியேற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புல்லுமலையில் போத்தல் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கிய வண்ணம் 100 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிரப்பை வெளியிட்டுள்ளனர்.

65Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*