கொழும்பு விமான படைவீரர் மர்மமான முறையில் சாவு! தீவிர விசாரனை ஆரம்பம்

இரத்மலானை விமானப்படை முகாமில் விமானப்படை வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கை விமானப்படையினரும் மவுன்ட்லவேனியா பொலிஸாரும் இருவேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 29 ம் திகதி பிரதீப்குமார ஜயலத் என்ற 20 வயது விமானப்படை வீரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது மரணம் குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையிலேயே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பிறப்பிக்கும் இறப்பிற்கும் இடையில் எப்படி இருக்கவேண்டும் மனிதன்?

பீரதீப்குமார ஜயலத்தின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அவர் தன்னை விமானப்படை முகாமை சேர்ந்த மற்றொரு நபர் தொடர்ந்து தொந்தரவு செய்துவருகின்றார் என உறவினர்களிடம் முறையிட்டுள்ளார்.

29 அதிகாலை தனது தாயுடன் தொடர்புகொண்டு தன்னை அழைத்துச்செல்லுமாறு அவர் கேட்டுள்ளார்.

32Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*