இன்று முதல் முழுமையாக மாற்றமடையும் கொழும்பு

இலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த வரைபடம் அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதனை கொள்வனவு செய்ய முடியும் என அரச நில அளவையாளர் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும்.

72Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*