தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்ற ரஜினிக்கு செருப்படி!

[embedyt]https://youtu.be/BVkyuJDOP-4[/embedyt]

ரஜினியின் தெள்ளத் தெளிவான பேட்டி.

ரஜினி – துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறு.

கேள்வி – விஷமிகள் கலவரம் செய்ததாக முதல்வர் கூறியிருக்கிறாரே

ரஜினி – விஷமிகள் ஊடுருவியுள்ளார்கள்.

கேள்வி – துப்பாக்கிச் சூடு நடத்தியது ?

ரஜினி – அதைத்தான் தவறு என்று சொல்லி விட்டேனே.

கேள்வி – அப்போ விஷமிகள் ஊடுருவியது ?

ரஜினி – அதை தடுக்க வேண்டும்.

கேள்வி – ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியா ?

ரஜினி – ஸ்டெர்லைட் ஆலையை ஒரு போதும் திறக்கவே கூடாது.

கேள்வி – அப்போ தொழில் வளர்ச்சி ?

ரஜினி – ஆலையை ஒரு போதும் மூடவே கூடாது.

கேள்வி – போராட்டம் நடத்தியதால்தானே ஸ்டெர்லைட் மூடப்பட்டது

ரஜினி – எப்போதும் போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கக் கூடாது.

கேள்வி – மக்கள் தங்கள் பிரச்சினைக்கு போராடித்தானே ஆக வேண்டும் –

ரஜினி – எப்போதும் போராடினால் தமிழகத்துக்கு முதலீடு வராது.

கேள்வி – பிறகு எப்படித்தான் பிரச்சனைக்கு தீர்வு காண்பது.

ரஜினி – போராட்டம் நடத்தாமல் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்.

கேள்வி – அது எப்படி வலியுறுத்துவது ?

ரஜினி – பாபாவிடம் வேண்ட வேண்டும்.

கேள்வி – வேண்டியும் வழங்கலன்னா ?

ரஜினி – வழங்கும் வரை வேண்ட வேண்டும்.

கேள்வி – துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் துறைதானே காரணம் ?

ரஜினி – சுட்டது காவல்துறையாக இருந்தாலும் குண்டு துப்பாக்கியில் இருந்துதானே வந்தது ?

கேள்வி – அப்போ போலீஸ் சுடலையா ?

ரஜினி – அதை கண்டுபிடிக்கத்தான் போலீஸ் இருக்கே. சட்டம் இருக்கே.

கேள்வி – சுட்டதே போலீஸ்தானே ?

ரஜினி – அதை போலீஸ்தான் கண்டுபிடிக்கணும்.

கேள்வி – சார் குழப்பமாக இருக்கு.

ரஜினி – எனக்கு மட்டும் தெளிவாவா இருக்கு?

கேள்வி – முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமா ?

ரஜினி – அவர் எதுக்கு ராஜினாமா செய்யணும் ?

கேள்வி – அவர்தானே உள்துறை அமைச்சர்.

ரஜினி – அப்போ அவர் உள்ளதானே இருப்பார்.

வெளியில நடந்ததுக்கு அவர் எப்படி ராஜினாமா பண்ணுவார் ?

கேள்வி – தூத்துக்குடி மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா ?

ரஜினி – காலா படம் 7ம் தேதி ரிலீஸ் ஆகுது. தமிழ்நாட்டுக்கு பல செய்திகளை சொல்லிருக்கேன். ஸ்டெர்லைட் பத்தி கூட சொல்லிருக்கேன். பாத்தீங்கன்னா உங்க வாழ்கே சந்த்தோஷமா இருக்கும். கவலையெல்லாம் மறந்துடுவீங்க.

மக்கள் – நாங்க தமிழ் ராக்கர்ஸ்லயே பாத்துக்கறோம். மூடினு போய்யா

பதிவு Shankar A

139Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*