வனவளத் திணைக்கள அதிகாரி துப்பாக்கி கொண்டு மிரட்டினார்! – ரணிலிடம் முறையிட்டார் சிறிதரன்

“கிளிநொச்சி வனவளத் திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியால் அச்சுறுத்தினார். ஒரு நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார்.”

Loading...

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டார்.

நேற்று கிளிநொச்சிக்குச் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“அந்த அதிகாரி ஒரு மனிதரை போல நடந்துகொள்ளவில்லை. இடுப்பில் பிஸ்டலுடன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து அச்சுறுத்தினார். அவர் ஒரு தமிழ் அதிகாரி. அவர் மக்களின் நலன்களுக்கு புறம்பாகவே நடந்துகொள்கின்றார். இவரின் செயற்பாடு காணி இல்லாத மக்களுக்கு காணி வழங்குவதற்கு தடையாக இருக்கின்றது” – என்று தெரிவித்தார்.

21Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*