தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் அமைக்க கனடா அனுமதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அருங்காட்சியகம் ஒன்றை கனடாவில் உருவாக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக

சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் இன அழிப்பு” என்ற பெயரில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட உள்ளது. மேலும் “தமிழ் இன அழிப்பு” தொடர்பில் “தஸ்ஹ_ம் பானம்” என்ற பெயரில் இணையத் தளமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பெண் செயற்பாட்டாளரே இந்த முனைப்புகளை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இணையத்தளத்தை உருவாக்குவதற்கும், அருங்காட்சியகத்தை உருவாக்குவதற்கும் குறித்த பெண் செயற்பாட்டாளர் கனடா செல்வதற்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனத்தின் பெண் செயற்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

204Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*