வற்றாப்பளை சென்ற பக்தர்களிற்கு வீதியில் நேர்ந்த கதி! பின்னர் சிக்கியவர்கள் யார் தெரியுமா??

வவுனியாவிலிருந்து பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்த சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து நேற்று மாலை பரந்தன் வழியாக வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில் பயணித்த பக்தர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறிதது, வாகனத்தில் பயணித்தவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி, வாகன சாவியையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இச் சமபவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு பேரையும் மோட்டார் இரண்டு சைக்கிள்களையும் கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை சென்றவர்களிடம் வழிப்பறி -குழுவை வளைத்துப் பிடித்த இளைஞர்கள்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்குச் சென்று வாகனத்தில் வீடு திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்தனர் எனக் கூறப்படுகிறது.

வவுனியா, பரந்தன் ஊடாக இன்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதனை அவதானித்த கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து, குறித்த மோட்டார் சைக்கிளில் வந்த குழுவைச் சேர்ந்த இருவரை மடக்கி பிடித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

130Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*