வாழைச்சேனை ஆலய தீ மிதிப்பில் ஆயிரக் கணக்கான பக்கதர்கள் பங்கேற்பு!

கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்கள் மதியப் ப10சை¸ இரவுப் ப10சை என்பன இடம் பெற்று இன்று செவ்வாய்கிழமை திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு நிகழ்வு இடம் பெற்றது.

இங்கு வாழைச்சேனை¸ புதுக்குடியிருப்பு¸ பேத்தாழை¸ கல்மடு¸ கறுவாக்கேணி¸ சுங்காங்கேணி உட்பட பல கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு தீ மிதிப்பில் கலந்து கொண்டனர்.

சடங்கு உற்சவ ப10சை நிகழ்வுகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குருவும்¸ மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும்¸ பாராளுமன்ற உறுப்பினருமாகிய சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுன் விளையாட்டுக் கழகத்தினரால் பக்த அடியார்கள் அனைவரும் தாக சாந்தியினை வழங்கி வைத்தனர்.

155Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*