227 பயணிகளுடன் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்து

227 பயணிகளுடன் கேரளாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதள விளக்கில் மோதியது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சியிலிருந்து 227 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று மாலை கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்றது.

ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியதையடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர், சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, நிலைமை சரி செய்யப்பட்ட பின்னர் ஓடுதளம் திறக்கப்பட்டது.

இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*