விக்னேஸ்வரன் – சுமந்திரன் பற்றி தகவல் வெளியிட்ட மைத்திரி

எந்த சமயமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடக்கில் விகாரைகளை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்து வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.

சுகாதார மற்றும் பொருளாதார செயத்திட்டங்களை முன்னெடுக்கும் நிரோதா எனும் செயத்திட்டத்தின் அறிமுக நிகழ்வு ஹற்றன் இலங்கை திறந்த பல்கலைக்கழக கிளைக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இவர்களின் நோக்கம் தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் பிளவு படுத்துவதே. எந்த ஒரு சமயமாவது மக்களுக்கு தீமையானவற்றை போதிக்கவில்லை.

அது பௌத்தம் என்றாலும் சரி இந்து சமயம் என்றாலும் சரி இஸ்லாம் சமயம் என்றாலும் சரி எல்லா சமயங்களும் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கே போதிக்கின்றன.

அப்படி என்றால் ஏன் நாம் சமயத்தால் வேறு பட வேண்டும். இன்று சுமார் 3500 குடும்பங்கள் தான் காலியில் வாழ்கின்றனர். ஆனால் அங்கு நுழையும் போதே ஒரு இந்துக் கோயில் தான் இருக்கின்றது.

அதனை எவராவது உடைக்க முற்படுகிறார்களா? மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி மக்களைப் பிரிவினை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் நினைகின்றார்கள்.

அவ்வாறு செய்தால் தான் அவர்களுக்கு நாடாளுமன்றம் செல்லலாம். அதற்காக அவர்கள் மக்களை அடிமைகளாகவும் ஏழைகளாக வைத்திருக்கின்றார்கள்.

சமயங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்த நினைத்தால் அதற்கு ஒரு போதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

52Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*