யாழ் குடா நாட்டை திணற வைத்த சம்பவங்களில் ஒன்று ஆங்காங்கே இடி மின்னல் தாக்கம். இடி மின்னல் பற்றிய விழிப்புணர்வு பதிவு!

வரணிப் பகுதியில் மின்னல் தாக்கி மாடு ஒன்று இறந்துள்ளது. தொடந்து யாழ் ஓட்டுமடம் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை எரிந்தது அடுத்து சாவகச்சேரி பெண்கள் கல்லூரியில் மின்னல் தாக்கி கட்டிடம் எரிந்தது. இறுதியாக இன்று கீரிமலை நகுலேஸ்வர ஆலய கோபுரத்தை இடி மின்னல் தாக்கியது.. இவை நான் அறிந்தவை அறியாதவை இன்னும் இருக்கலாம்.. ஆகையினால் இடி மின்னல் பற்றிய விழிப்புணர்வை மக்களிற்கு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன்…

Loading...

தற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கின்ற மழைவீழ்ச்சி மேற்காவுகைச்சுற்றோட்டத்தின் (Convectional current)விளைவாக கிடைக்கின்ற மழைவீழ்ச்சியாகும். செறிவான மேற்காவுகை மழைவீழ்ச்சி (intensive convectional rainfall)எப்போதும் இடிமின்னலுடன் தொடர்புடையது. மேற்காவுகைச் செயற்பாட்டின்போது உருவாகின்ற கார்திரள்(Cumulo-Nimbus) முகில்களுக்கிடையிலான மின்னேற்றமே இடிமின்னலுக்கான அடிப்படையாகும்…

[embedyt]https://youtu.be/Tu_9Rrq-opY[/embedyt]

நாளேடுகளின் பக்கங்களில் மின்னல் தாக்கி பரிதாபமாய் உயிரை விடும் அப்பாவிகளின் செய்திகள் மனதை உலுக்குகின்றன.

எப்போது எங்கே எப்படித் தாக்கும் என அறிய முடியாத ஒரு ரகசியச் சாத்தான் போல மின்னலும் இடியும் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே தான் பழைய புராணங்கள் இடியையும், மின்னலையும் கடவுளின் கோபத்தின் வெளிப்பாடுகள் என புரிந்து கொண்டன..

மின்னலும், இடியும் ஒரே நேரத்தில் தான் உருவாகின்றன. ஒளியானது ஒலியை விட வேகமாய் பயணிப்பதால் தான் வெளிச்சம் முதலில் தெரிகிறது, ஒலி பின்னால் வருகிறது. ஒளியின் வேகமான வினாடிக்கு 186,000 மைல்கள் எனும் வேகத்துடன் ஒப்பிடுகையில் ஒலியின் வேகம் நத்தையின் வேகம் தான். பூமியிலிருந்து வானுக்கு ஒரு நேர் மின் தொடர்பு உருவாகவில்லையெனில் மின்னலோ இடியோ உருவாகாது. ஆனால் அப்படி நிகழாமல் தடுப்பது சாத்தியமில்லை. ஏனெனில் ஒரு பெரிய மரமோ, மின் கம்பமோ, தெருவுக்கு தெரு முளைத்து நிற்கும் கொடிகம்பமோ ஏதேனும் ஒன்று போதும் மின்னலை வரவேற்க.

அதனால் தான் பெரிய கட்டிடங்கள், ஆலைகள் போன்றவற்றின் உச்சியில் பெரிய இடிதாங்கியை வைப்பார்கள். இது மேகத்திலிருந்து வரும் மின்சாரத்தை அருகிலுள்ள பகுதிகளில் விழாமல் பாதுகாத்து தானே வாங்கிக் கொள்ளும். அப்படியே பூமிக்கு அடியில் அதைக் கடத்தியும் விடும். இப்படி மின்னலை இழுத்து அதிலிருந்து மின்சாரத்தைத் தயாராக்க முடியுமா எனும் முனைப்பும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

மின்னல் தாக்காமல் காத்துக் கொள்ள என்ன செய்யவேண்டும் ?

1. இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருந்தால் வெளியில் செல்லும் பயணத்தை ஒத்திவையுங்கள். வீடுகளில் பாதுகாப்பாய் இருங்கள்.

2. பெரும்பாலான மின்னல் பாதிப்புகள் மழைவிட்ட பின்போ, மழை துவங்குவதற்கு முன்போ தான் நிகழ்கின்றன எனவே, மழை விட்டபின் ஒரு அரைமணி நேரமாவது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோலவே மழை வரும் வாய்ப்பு தெரியும் போதே கவனமாய் இருக்க வேண்டும்.

3. மின்னலை நாம் பார்ப்பதற்கும், தொடரும் இடிச் சத்தத்தைக் கேட்பதற்கும் இடையேயான நேரமே நமக்கும் மின்னல் தாக்கிய இடத்தும் இடையேயான தூரத்தைச் சொல்கிறது. இந்த இடைவெளி ஐந்து வினாடிகளை விடக் குறைவெனில் சுமார் ஒரு மைல் இடைவெளியில் எங்கோ மின்னல் தாக்கியிருக்க வாய்ப்பு உண்டு என கணித்துக் கொள்ளுங்கள்.

4. இடி மின்னல் வேளைகளில், உயரமான மரங்கள், கொடிக் கம்பங்கள், கைபேசிக் கோபுரங்கள், பேருந்து நிறுத்தங்கள், உலோகப் பொருட்கள் இருக்கும் இடங்கள் இவற்றின் அருகே நிற்காதீர்கள்.

5. அதே போலவே வெட்டவெளியிலோ, நீர் நிலைகளிலோ, கடற்கரைகளிலோ, விளையாட்டு மைதானங்களிலோ நிற்காதீர்கள். அந்த இடங்களில் உயரமாய் இருப்பது நீங்கள் தான் என்பதால் நேர் மின்சாரத்தை மேகம் உங்கள் உடலிலிருந்து ஈர்க்கக் கூடும்.

6. ஒருவேளை வெட்ட வெளியில் இருக்க நேர்ந்தால் தரையில் படுக்கவே படுக்காதீர்கள். குனிந்து வயல் வரப்பில் குந்தவைத்து அமர்வது போல அமருங்கள். தலையைக் குனித்து கால் முட்டியில் வையுங்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

7. சட்டென மயிர்க்கூச்செரிந்தாலோ, அதிர்வு உணரப்பட்டாலோ மின்னல் வெகு அருகில் தாக்கும் வாய்ப்பு உண்டு என உணர்ந்துகொள்ளுங்கள். குழுவாக இருக்காதீர்கள் பிரிந்து தனித்தனியே செல்லுங்கள்.

8. வீட்டுக்குள்ளே இருந்தால், அந்த நேரத்தில் தொலைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். தொலைபேசியில் அருகே இருப்பதைத் தவிருங்கள். தொலைக்காட்சி, கணினி உட்பட அனைத்து எலக்ட்ரானிக் கருவிகளையும் சற்று ஓய்வில் இருக்க விடுங்கள். மின் இணைப்பிலிருந்து அவற்றை துண்டித்து விடுங்கள். கேபிள் டிவியின் கேபிளையும் கழற்றிவிடுங்கள்.

9. வாகனத்தில் சென்று கொண்டிருந்தால் வாகன கண்ணாடிகளை முழுவதுமாக மூடிவிட்டு ஓரமாக நிறுத்திவிட்டு அமைதியாய் இருங்கள். மரங்கள், கம்பங்கள் போன்றவற்றின் அருகே வண்டியை நிறுத்தாமல் கவனமாய் இருங்கள்.

10. வீடுகளில் அந்த நேரங்களில் சமையல் செய்வது, குளிப்பது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். குறிப்பாக திறந்த சன்னல் அருகே நின்று வானத்தை வெறிக்காதீர்கள்.

இயற்கையின் மொழிகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற செயல்களைச் செய்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும்.

கு.தினேஷ்

B.A (Hons) tamil spcl.

410Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*