திடீரென வந்த புகையிரதம்; கடவைக்குள் மாட்டிய மாணவன்: யாழில் அதிர்ச்சி சம்பவம்!

புகையிரதம் கடவை மூடப்படாததால் வீதியை கடக்க முற்பட்ட மக்கள், திடீரென புகையிரதம் வந்ததால் நூலி­ழை­யில் உயிர் தப்­பி­னர். கடவைக்குள் மாணவரை ஏற்றிக்கொண்டு வந்தவர், வீதியோரமாக பாய்ந்து, மயிரிழையில் உயிர்தப்பினார்.

இந்­தச் சம்­ப­வம் யாழ்ப்­பா­ணம் புங்­கன்­கு­ளம் வீதி­யி­லுள்ள கட­வை­யில் நேற்று மதி­யம் 1.47க்கு இடம்­பெற்­றது.

[embedyt]https://youtu.be/ww6gYVpvE1g[/embedyt]

வழக்கமாக தொட புகையிரதம் வரும்போது, இந்த கடவை மூடப்படும். நேற்று மூடப்படவில்லை. ஆனால் புகையிரதம் திடீரென வந்துவிட்டது. ஆனால் ஒலி (கோர்ன்) எழுப்­ப­வு­மில்லை. பாட­சாலை நிறை­வ­டைந்து பிள்­ளை­க­ளு­டன் பெற்­றோர் அந்த வீதியை கடந்து கொண்டிருந்தனர். புகையிரதம் வந்தபோது, அதற்கு எதிராக மாணவனுடன் ஒருவர் வீதியை கடந்து கொண்டிருந்தார். புகையிரதத்தை கண்டதும், மாணவனுடன் வீதியோரம் பாய்ந்து வீழ்ந்ததால் மயிரிழையில் தப்பித்தார்.

புகையிரத கடவை போடததால்,புகையிரதம் வர­வில்லை என்று கருதி தாம் கட­வையை மக்­கள் கடந்­துள்­ள­னர்.

புகையிரத கடவை காப்பாளர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் இருப்பதால், நேற்று யாரும் காப்பு பணிக்கு போகாததால் கடவை மூடப்படவில்லையென தெரிகிறது.

96Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*